முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை முயற்சி வழக்கு: 9 மாத பாக்., குழந்தை விடுவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

லாகூர்,ஏப்.14 - பாகிஸ்தானில், கொலை முயற்சி வழக்கில் இருந்து 9 மாத குழந்தை ஒன்று விடுவிக்கப்பட்டது. குழந்தை மீது தொடரப்பட்ட வழக்கை லாகூர் போலீசார் திரும்பப்பெற்றதை அடுத்து வழக்கில் இருந்து குழந்தை விடுவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், லாகூர் கிழக்கு நகரில் பொதுமக்களுக்கும் - போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். கலவரத்தில் போலீஸ் ஒருவரை கொலை செய்ய முயற்சித்ததாக 9 மாத குழந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இநத வழக்கு விசாரணை தொடர்பாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, குற்றம்சாட்டப்பட்ட குழந்தையை அதன் பெற்றோர் அழைத்து வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குழந்தை மீது தொடரப்பட்ட வழக்கை போலீசார் வாபஸ் பெறுவதாக கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதி இர்பான் தரார், குழந்தையை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

9 மாத குழந்தை மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டது பாகிஸ்தானின் நீதித்துறை நிலையை எடுத்துரைப்பதாக சரவதேச அளவில் பரவலாக விமர்சனங்கள் வெளியாகின. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்