முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1000 கி.மீட்டர் வேகத்தில் பறக்கும் அதிநவீன கார்!

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், ஏப்.14 - உலகில் அதிவேக கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மணிக்கு 1000 கி.மீட்டர் வேகத்தில் பறக்ககூடிய அதிநவீன கார் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்வான் சீ பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் கல்லூரியைச் சேர்ந்த குழுவினர் இக்காரை வடிவமைத்துள்ளனர். அதில், விண்வெளி ஏரோநாட்டிக்கல் மற்றும் பார்முலா 1 இன்ஜினீயரிங் தொழில்நுட்பங்கள் கலக்கப்பட்டுள்ளன. சூப்பர் கானிக் என்று அழைக்கப்படும் அதிவேக கார் தயாரிக்கும் பணி கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தற்போது இந்த பணி முடிவடைந்து விட்டது. அது சோதனை ஓட்டத்துக்கு தயாராக உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அப்போது மணிக்கு 800 கி,மீட்டர் வேகத்தில் ஓட்டப்படும். இக்காரை விங் கமாண்டர் ஆன்டிகிரீன் இயக்குகிறார். இதற்கு முன்பு மணிக்கு 736.035 கி.மீட்டர் வேகத்தில் கார் ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 2016-ஆம் ஆண்டில் இந்த கார் தென்ஆப்பிரிகாவின் ஹக்ஸ்கேர்பான் பாலைவனப்பகுதியில் ஓட்டி சாதனை நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் இதை இந்தியாவில் குஜராத்தில்  உள்ள ரான் ஆப்கட்ச் பகுதியில் ஓட்ட திட்டமிட்டப்பட்டது. ஆங்கு 30 டிகிரி செல்சியசுக்கும் மேலாக வெப்பம் இருப்பதால் கார் இன்ஜினின் வேகம் பாதிக்கும். அதே நேரத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹக்ஸ்கீன் பான் பகுதியில் 10 முதல் 20 டிகிரி செல்சியலே நிலவுகிறது. எனவே அங்கு சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago