முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ்: அரையிறுதியில் தீபிகா பலிக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஹஸ்டன், ஏப்.14 - டெக்சாஸ் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா பலிக்கல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

அமெரிக்காவின் ஹோஸ்டன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின்  காலிறுதியில் கயானாவின் நிக்கோலெட் பெர்னாண்டஸை எதிர்கொண்டார் தீபிகா பலிக்கல். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களை 11-4, 11-6 என்ற கணக்கில் பலிக்கல் கைப்பற்ற, அடுத்த இரு செட்களை 12-10, 12-10 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தார் நிக்கோலெட். பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 5-வது சுற்றில் அபாரமாக ஆடிய தீபிகா பலிக்கல், அதை 11-5 என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை வெற்றியில் முடித்தார். 

சர்வதேச தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த தீபிகா பலிக்கல், தனது அரையிறுதியில் அயர்லாந்தின் மேட்லைன் பெர்ரியை சந்திக்கிறார். சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள பெர்ரி, தனது காலிறுதியில் 11 7, 9 11, 11 6, 11 8 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் இம்மா பெடோஸைத் தோற்கடித்தார். 

மற்றொரு காலிறுதியில் போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தவரான மலேசியாவின் லோ லீ வெர்ன், எகிப்தின் தகுதி நிலை வீராங்கனை நூர் எல் ஷெர்பினியிடம் தோல்வி கண்டார். 18 வயதான ஷெர்பினி 11-3, 11-8, 10-12, 11-6 என்ற செட் கணக்கில் லீ வெர்னை தோற்கடித்தார். 

சமீபகாலமாக அதிரடியாக ஆடி வரும் ஷெர்பினி, கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான மலேசியாவின் நிகோல் டேவிட்டை தோற்கடித்தார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இளம் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 3 முறை பட்டம் வென்றவரான ஷெர்பினி, தனது அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் கேமிலே செர்மியை சந்திக்கிறார். 

பிரான்ஸின் முதல் நிலை வீராங் கனையான செர்மி 8-11, 17-15, 11-6, 11-4 என்ற செட் கணக்கில் உலகின் 6-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ரஹேல் கிரின்ஹாமை தோற்கடித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்