முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசி கேத்மிடில்டன் மீண்டும் கர்ப்பம்? வில்லியம் தகவல்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

வெல்லிங்டன், ஏப்.15 - இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இவரது மனைவி கேத்மிடில்டன். இவர்களுக்கு கடந்த 8 மாதத்துக்கு முன்பு "ஜார்ஜ்" என்ற ஆண்குழந்தை பிறந்தது. இக்குழந்தைதான் மூன்றாம் தலைமுறை பட்டத்து இளவரசன் என அறிக்கப்பட்டுள்ளது. தற்போது இளவரசர் வில்லியம் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் 19 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த நிலையில், இளவரசி கேத்மிடில்டன் மீண்டும் கர்ப்பம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் நகரில் தற்போது அவர்கள் முகாமிட்டுள்ளனர். அங்கு நடந்த விருந்து நிகழ்ச்சியில் கேத் மிடில்டன் ஒயின் அருந்திய போதும், ஜெட் படகில் பயணம் செய்த போதும் கர்ப்பிணி பெண்ணுக்குரிய சோர்வுடன் காணப்பட்டார். 

எனவே, அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்து இருக்கலாம் என கிசுகிசுக்கப்பட்டது. இந்த நிலையில், கேம்பிரிட்ஜ் நகரில் நடந்த அரசு விழாவில் புதிய இளவரசர் ஜா்ரஜூக்கு "ஸ்வெட்டர் " உடைகளை சிந்தியா ரீடு என்பவர் பரிசாக வழங்கினார். அப்போது, " இது போன்ற பரிசை நீங்கள் மீண்டும் விரைவில் வழங்க வேண்டியது வரும் " என சிரித்தப்படியே நகைச்சுவையாக குறிபிட்டார். இது குறித்து சிந்தியா ரீடிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் இளவரசர் வில்லியம் என்னிடம் கூறியது மிகவும் ரகசியம் " என தெரிவித்தார். அவர் இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்துக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்