முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருநாள்: கோயில்களில் அலைமோதிய கூட்டம்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, ஏப் 15 - சித்திரை திருநாளையொட்டி கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புத்தாண்டு வாழ்த்துக்களுடன் பலர் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். 

சித்திரை திருநாளையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்ப பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மீனாட்சி அம்மனுக்கு நேற்று காலையில் தங்க கவசம், வைர கிரீடம் சாத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு வைர நெத்திப்பட்டை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. சுவாமி சன்னதி முன்பு கம்பத்தடி மண்டபம் அருகே உள்ள பத்ரகாளி சன்னதி அருகில் புத்தாண்டை அறிவிக்கும் வகையில் தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பன்னெடுங்காலமாக பின்பற்றப்படும் இந்த பஞ்சாங்க வாசிப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும், சிவாச்சார்யார்களும் கலந்து கொண்டனர். 

சித்திரை முதல் நாள் சிறப்பு பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி, அம்மன் தரிசனம் செய்தனர். இதே போல் கூடலழகர் பெருமாள், திருப்பரங்குன்றம், அழகர்கோவில் ஆகிய கோயில்களிலும் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பிள்ளையார், அம்மன் கோயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago