முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசிய விமானத்தை தேட ரோபோவை அனுப்ப முடிவு

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

பெர்த், ஏப் 15 - மாயமான மலேசிய விமானத்தை கடலுக்கு அடியில் ரோபோவை அனுப்பி தேடும்  பணியில் ஈடுபட ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. 

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு கடந்த மாதம் 8ம் தேதி 259 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் விமானம் எவ்வாறு மாயமானது என்ற மர்மம் இதுவரை வெளியாகவில்லை. 

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சுமார் 1800 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் கறுப்புபெட்டியில் இருந்து சிக்னல்கள் கிடைத்ததாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோத் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் இவற்றை சில கப்பபல்கள் கண்டறிந்ததாகவும் செய்திகள் வெளியாயின. தற்போது கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல்கள் வருவது முற்றிலுமாக நின்று விட்டதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையில் விமானம் காணாமல் போன தினத்தன்று நள்ளிரவு துணை பைலட் ஒருவர் தனது செல்போனில் இருந்து அவசர அழைப்பை மேற்கொள்ள முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானத்தின் சிக்னல் துண்டிக்கப்படுவதற்கு சற்று முன்பு தலைமை பைலட் மற்றும் சக பைலட் ஆகியோர் யாரையோ அவசரமாக அழைக்க முயன்றுள்ளனர். ஆனால் சரியான சிக்னல் கிடைக்காமல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதை மலேசிய அரசு உறுதிப்படுத்த மறுத்து விட்டது. 

இது குறித்து மலேசிய அமைச்சர் நிஷாமுதீன் ஹூசைன் கூறுகையில், அதிகாரிகள் ஆய்வு செய்து உண்மையை வெளியிடும் வரையில் உறுதியான தகவல்கள் எதையும் தெரிவிக்க இயலாது என்றார். இதற்கிடையில் கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்ததாக கூறப்படும் கடலுக்கு அடியில் ரோபோவை அனுப்பி விமானத்தை தேட முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்