முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலியில் காட்டுத் தீ: 11 பேர் சாவு: 500 வீடுகள் எரிந்து சேதம்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

சாண்டியாகோ, ஏப்.15 - சிலிநாட்டில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயால் 11 பேர் உயிரிழந்தனர். 500 வீடுகள் எரிந்து சாம்பலாகின. சிலியின் துறைமுக நகரமான வால்பறைசோ நகருக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் இந்த காட்டுத் தீ ஏற்பட்டது. பின்னர் குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால், 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து அந்நாட்டின் உள்த்துறை அமைச்சர் ரோட்ரிகா பெணால்லி கூறியதாவது:

இந்த தீ விபத்தில் ஒரு பெண் உள்பட் 11 பேர் உயிரிழந்தனர். விபத்து காரணமாக நகரம் முழுவதும் மண்டலத்தால் சூழ்ந்திருந்ததால் அங்குள்ள சிறையில் இருந்த பெண் கைதிகள் 200 பேர் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மலைப்பகுதியின் நடுவே குடியிருப்புகள் அமைந்துள்ளதால், தீயை முழுமையாக அணைப்பதற்கு தீயணைப்புப் படை வீரர்களும் வனத்துறையினரும் கடுமையாக போராடினார்கள் என்றார்.

யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய நகரம் என்று அறிவிக்கப்பட்ட வால்பரைசோ நகருக்கு சிலியின் மற்ற பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்  வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்