முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12 தாலிபான்களை விடுதலை செய்கிறது பாகிஸ்தான்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஏப்.15 - பாகிஸ்தான் சிறையில் உள்ள 12 தலிபான் தீவிரவாதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சஸிபான்களிடம் நடத்தும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் வகையில் பாகிஸ்தான் அரசு இந்த நடவடிக்கையை மேர்கொள்கிறது. அரசு முறைப் பயணமாக சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், 12 தலிபான் தீவிரவாதிகளை விடுதலை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றனர். எனினும், இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ் அறிவிப்பு வெளியாகவில்லை. பாகிஸ்தான் உள்த்துறை அமைச்சர் சௌத்ரி நிஸார் அலிகான, சிறையில் உள்ள தலிபான் தீவிரவாதிகள் 13 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக ஏப்ரல் 5-ஆம் தேதி அறிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு 2 நாள்களுக்கு முன்பு, பாகிஸ்தான் சிறையில் இருந்து 19 தலிபான் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். முன்னதாக பாகிஸ்தான் சிறையில் உள்ள தங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விடுவிக்குமாறு 400 பேரின் பட்டியலை பாகிஸ்தான் அரசிடம் தலிபான் தீவிரவாதிகள் கொடுத்தனர். ஆனால் அனைவரையும் விடுவிக்க இயலாது என்று பாகிஸ்தான் அரசு கூறிவிட்டது. மேலும் பாகிஸ்தானின் கெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தினர் கேட்டுக் கொண்டப்படி, தெற்கு வஜிரிஸ்தானை அமைதி மணடலமாக அறிவிக்க முடியாது என்று பாகிஸ்தான் அரசு கூறிவிட்டது.

தெற்கு வஜிரிஸ்தானில் இரு தரப்பு சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வடக்கு வஜிரிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள தால் மாவட்டத்திலேயே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago