முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. மின்பற்றாக் குறை மாநிலமாக்கியது: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஏப்.16 - ஆரணி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக முதல்_அமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் தற்போது நிலவும் மின்பற்றாக் குறைக்கு முந்தைய தி.மு.க. அரசே காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா ஜெயலலிதா குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:

மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்பற்றாக் குறை மாநிலமாக்கியது தி.மு.க.வே.  கடந்த 3 ஆண்டுகளில் 30 லட்சம் புதிய மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 12,170 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நெய்வேலியிலிருந்து கூடுதலாக 250 மெகாவாட் மின்சாரம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூலையில் நெய்வேலியிலிருந்து கூடுதலாக 250 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். என்றும் முதல்வர்ஜெயலலிதா தெரிவித்தார்  .

ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 

`வடதண்டலம் கிராமம், செய்யார் ஆரணி நெடுஞ்சாலை' என்ற இடத்தில் நடைபெற்ற 

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:_

 

வாக்காளப் பெருமக்களே! மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் ஒன்பது ஆண்டு காலம் அங்கம் வகித்த கட்சி தி.மு.க.  2006 முதல் 2011 வரை மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சி தி.மு.க. ஆனால், தமிழகத்தின் மின் உற்பத்தியை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தி.மு.க. எடுத்ததா? இல்லையே!  மாறாக மின் மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை மின் குறை மாநிலமாக ஆக்கியது தி.மு.க. மின் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்காமல், நீண்ட கால அடிப்படையில் மின் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்காமல், பணம் பார்க்க வேண்டும்; கமிஷன் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, குறுகிய கால அடிப்படையில் அதிக விலை கொடுத்து, மின்சாரத்தை வாங்குவதிலேயே குறியாக இருந்தது தி.மு.க. இதன் காரணமாக, மின்சார வாரியத்திற்கு 50,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் ஏற்பட்டதோடு, ஒரு நாளைக்கு 10 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் அளவுக்கு தமிழ்நாடு இருளில் தள்ளப்பட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் அளிக்கக் கூடாது என்று பாரத ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடும் வகையில், மின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மின் துறையில் தி.மு.க. செய்த சாதனை இது தான். 

தி.மு.க. எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் 

மின் பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம். இதற்குக் காரணம் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காதது தான். 1991 முதல் 1996 வரையிலான எனது முதல் ஆட்சிக் காலத்தில், கிட்டத்தட்ட 1,300 மெகாவாட் மின் நிறுவு திறன் கூடுதலாக சேர்க்கப்பட்டது. 2001 முதல் 2006 வரையிலான எனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 2,500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின் நிறுவு திறன் சேர்க்கப்பட்டது. ஆனால், 1996 முதல் 2001 வரையிலான தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெறும் 561 மெகாவாட் மின் நிறுவு திறனும், 2006 முதல் 2011 வரையிலான மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வெறும் 206 மெகாவாட் மின் நிறுவு திறனும் தான் கூடுதலாக சேர்க்கப்பட்டது. 

2011_ஆம் ஆண்டு நான் 3_ஆவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு மின்சாரத் தேவை 11,000 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், மின் உற்பத்தி வெறும் 8,000 மெகாவாட்டாக இருந்தது. அதாவது, மின் தேவைக்கும், மின் உற்பத்திக்குமான இடைவெளி 3,000 மெகாவாட்டாக இருந்தது. வாக்காளப் பெருமக்களே! இந்த அளவு மோசமான 

மின் நிலைமையை சீர் செய்ய போதுமான கால அவகாசம் தேவை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

தமிழ்நாடு மின்சார வாரியத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்கவும், புதிதாக மின் உற்பத்தியை பெருக்கிடவும், மின் வெட்டை நீக்கிடவும், போர்க்கால அடிப்படையில் எனது அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மின் பற்றாக்குறையில் இருந்து விடுபட வேண்டுமென்றால், ஒன்று தமிழ் நாட்டிலேயே கூடுதல் மின் உற்பத்தி செய்யப்பட வேண்டும் அல்லது வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கப்பட வேண்டும். புதிய மின் நிலையங்களில் பணிகள் நிறைவடைய உரிய கால அவகாசம் தேவை. எனவே, வெளி மாநிலங்களில் இருந்து  மின் வழித் தடங்கள் வழியாகத் தான் மின்சாரத்தை கொண்டு வர முடியும். ஆனால், தி.மு.க_வின் தூண்டுதலின் பேரில், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அவ்வாறு மின்சாரத்தை கொண்டு வருவதை அனுமதிக்கவில்லை. டெல்லி மாநில அரசு தனக்கு வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்த 1,700 மெகாவாட் மின்சாரத்தைக் கூட தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நமக்குத் தர தமிழகத்திற்குத் தர மறுத்துவிட்டது. இருப்பினும் எனது பகீரத முயற்சியின் காரணமாக, மேட்டூர் அனல் மின் திட்ட மூன்றாம் நிலை அலகிலிருந்து 600 மெகாவாட்; வல்லூர் கூட்டு மின் திட்டத்தின் இரு அலகுகளிலிருந்து 700 மெகாவாட்; வட சென்னை அனல் மின் திட்டத்தின் இரு அலகுகளிலிருந்து 1,200 மெகாவாட் என; கிட்டத்தட்ட 2,500 மெகாவாட் அளவுக்குக் கூடுதல் மின் நிறுவு திறன் தற்போது உருவாக்கப்பட்டு உள்ளது. இது தவிர, நடுத்தர கால அடிப்படையில் 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து 450 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மாநிலத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான சிறு மின் நிலையங்களில் இருந்து கூடுதலாக 350 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகிலிருந்து 

370 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு தற்போது கிடைத்து வருகிறது.  ஆக மொத்தம், இன்றைய தேதியில் 2010_2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கூடுதலாக 4,170 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கிறது. ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் கிட்டத்தட்ட 12,170 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது, 12,170 மெகாவாட்டில், 4,170 மெகாவாட் அதாவது, 34 சதவீத மின்சாரம் எனது ஆட்சியில் மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே பெறப்பட்டுள்ளது என்பது எவ்வளவு பெரிய சாதனை என்பதை ஊடக நண்பர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். வாக்காளப் பெருமக்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்.  முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சராசரியாக தினசரி 208 மில்லியன் க்ஷ்னிட்டுகள் என்றிருந்த மின் விநியோகம், தற்போது 270 மில்லியன் க்ஷ்னிட்டுகளாக உயர்ந்துள்ளது.  கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 30 லட்சம் புதிய மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன.   நம்முடைய தற்போதைய தேவை 12,800 மெகாவாட் ஆகும். 

சகஇஅனல் மின் நிலைய விரிவாக்கத்திலிருந்து இந்த மாதம் 250 மெகாவாட் மின்சாரமும், ஜூலை மாதத்தில் 250 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதிலிருந்து, 230 மெகாவாட் மின்சாரம் நமக்கு ஜூலை மாதத்திலிருந்து கிடைக்கும். தூத்துக்குடியில் உருவாக்கப்பட்டு வரும் சகஇ மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கூட்டு முயற்சி திட்டத்தின் முதல் அலகிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் ஜூன் மாதத்தில் இருந்தும், இரண்டாவது அலகிலிருந்து 500 மெகாவாட் மின்சாரம் செப்டம்பர் மாதத்தில் இருந்தும் உற்பத்தி ஆக இருக்கிறது. இந்தத் திட்டத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 

வல்லூர் மூன்றாவது அலகிலிருந்து, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 

500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதிலிருந்து, தமிழ்நாட்டிற்கு 350 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இது தவிர 3,330 மெகாவாட் அளவு மின்சாரத்தை 

15 ஆண்டுகளுக்கு பெறத் தக்க வகையில், நீண்டகால அடிப்படையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில், 74 மெகாவாட் தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள ஒரு தனியார் மின் நிலையத்திலிருந்து 1_1_2014 முதல் பெறப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து 208 மெகாவாட் மின்சாரமும், ஆகஸ்ட் மாதத்திலிருந்து மேலும் 1,000 மெகாவாட் மின்சாரமும் தமிழ்நாட்டிற்கு கிடைக்க உள்ளது. தற்போது, பரிசோதனையில் உள்ள சோலாப்பூர் _ ரெய்ச்சர் மின் வழித் தடம் வணிக உபயோகத்திற்கு விரைவில் கொண்டு வரப்படும் போது, இந்த 1,208 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைக்கும். தூத்துக்குடியில் உள்ள தனியார் மின் நிறுவனத்திடம் இருந்து 558 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. 

இது தவிர, கடலூர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டு வரும் தனியார் மின் திட்டத்தில் இருந்து 540 மெகாவாட் மின்சாரம் 2015_2016 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நமக்கு கிடைக்க இருக்கிறது.  

மீதமுள்ள 950 மெகாவாட் மின்சாரம் கூடுதல் மின் வழித் தடங்கள் நிறுவப்படுவது முழுமை பெற்றவுடன் பெறப்படும். இது தவிர, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அலகிலிருந்து 462 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும். 

ஆக மொத்தம், இந்த ஆண்டு இறுதிக்குள் கூடுதலாக 3,195 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும். அப்போது, தமிழ்நாட்டின் மின் உற்பத்தித் திறன் 14,745 மெகாவாட் ஆக இருக்கும். அதே சமயத்தில், மின் தேவை என்பது 14,505 மெகாவாட் என்ற அளவுக்கு தான் இருக்கும். நானே நேரடியாக மின் நிலைமை குறித்து ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருவதன் காரணமாகத்தான் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த அளவு மின்சாரத்தை நம்மால் பெற முடிகிறது. 

இந்தத் தருணத்தில் தற்போது என்ன நிலைமை என்பது பற்றியும், நான் உங்களுக்கு விளக்கி ஆக வேண்டும். கடந்த ஆண்டு 2013_ல் ஜூலை மாதம் முதல் அக்டோபர் 15_ஆம் தேதி வரை மின்வெட்டு இல்லாத சழ்நிலை தமிழகத்தில் நிலவியது. இதனை, நான் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் குளிர்கால கூட்டத் தொடரின் போது பெருமையாக கூறினேன். இவ்வாறு நான் சொன்னவுடன், தமிழ்நாடு மின்சார வாரியத்திடம் ஒப்படைக்கப்படாத புதிய கூட்டு மின் திட்டங்கள் உட்பட மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் பெறப்பட்டு வந்த மின் உற்பத்தி சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு சொல்லி வைத்தாற் போல் திடீர் என ஒரே சமயத்தில் குறைந்தது. இதன் காரணமாக, மீண்டும் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டது. இது ஏதோ சதிச் செயல், வேண்டுமென்றே மின் உற்பத்தி நிலையங்களை பழுதடையச் செய்து இருக்கிறார்கள் என்று நான் தெரிவித்தேன். அது பற்றி பாரதப் பிரதமருக்கும் கடிதம் எழுதினேன். அதை ஏற்றுக் கொள்வதைப் போலவே பாரதப் பிரதமரும் இது யதேச்சையாக நடந்தது என்று தெரிவித்து கடிதம் எழுதினார். அப்போது, ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் நடைபெற்றது. பின்னர் இந்தப் பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது. மின்வெட்டு இல்லாத சழ்நிலை மீண்டும் நிலவியது. 

அதன் பின்னர், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நான் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள சழ்நிலையில், தேர்தலுக்கு சில நாட்களே உள்ள இந்தக் காலகட்டத்தில் தற்போது மீண்டும் இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.   

இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் நிலையத்தின் புதிய அலகு, மீண்டும் ஏநீக்ஷஙுச்கிடீடூ வாயு கசிவின் காரணமாக 6.3.2014 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 600 மெகாவாட் திறன் கொண்ட வட சென்னை அனல் மின் நிலையத்தின் புதிய அலகு 5.4.2014 முதல் பழுதடைந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்த 370 மெகாவாட் மின்சார உற்பத்தி பழுதின் காரணமாக தடைபட்டு, தற்போது மீண்டும் சரி செய்யப்பட்டு மின்சாரம் பெறப்படுகிறது. தற்போது, மொத்தத்தில் 1,200 மெகாவாட் அளவுக்கு மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. தேர்தல் சமயத்தில் இது போன்று மின் வெட்டு ஏற்பட்டு இருப்பதும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது எந்தக் குறையையும் சுட்டிக் காட்ட முடியாத சழ்நிலையில் இந்த மின்வெட்டுப் பிரச்சனையை எதிர்க்கட்சிகள், குறிப்பாக தி.மு.க. சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வருவதும், இதே போன்ற பிரச்சனை தேர்தல் காலங்களில் ஏற்படுவதும், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மீது மக்கள் மனதில் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

இந்த புதிய மின் அலகுகள் பழுது அடைந்ததில் ஏதாவது சதித் செயல் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யப்பட்டு 

மின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மேட்டூர் மின் அலகில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை சரி செய்ய சீனாவிலிருந்து வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மின் நிலையம் மீண்டும் துவங்கும் போது மின் வெட்டு வெகுவாக குறைக்கப்பட்டுவிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மட்டுமல்லாமல் எதிர்கால மின் தேவையைக் கருத்தில் கொண்டு, 3,300 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் திட்டங்களுக்கு சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, பெறப்பட்டுள்ளன. இதில், 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்க மிக உய்ய அனல் மின் திட்டத்திற்கான  பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவை வெகு விரைவில் இறுதி செய்யப்படும். 2,000 மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டத்திற்கான தொடக்க ஆய்வுப் பணிகள் முடிவு பெற்றுள்ளன. விரைவில் முதற் கட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பணிகள் எடுத்துக் கொள்ளப்படும்.  

மின்சாரப் பிரச்சனையில் மக்களுக்கு துன்பங்களை விளைவித்து, அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் சவுக்கடி கொடுத்து விரட்ட வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்) 

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது மின் உற்பத்தியை பெருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காதவர் கருணாநிதி. எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் பைகாரா புனல் மின் திட்டத்திற்கு மத்திய அரசு மூலம் தடை போட்டவர் கருணாநிதி. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்