முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் கலெக்டருக்கு எதிராக வழக்கு: பரிசீலிக்க உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 16 - திருவாரூர் கலெக்டருக்கு எதிராக வழக்கை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், திருவாரூர் மாவட்டம், மேலவாசல் கிராமத்தை சேர்ந்த ஏ.எம்.ராஜா என்பவர் தொடர்ந்த மனுவில் கூறியிருப்பதாவது:_

துணை வட்டார வளர்ச்சி அலுவலராக 2013_ம் ஆண்டு மே மாதம் பதவி உயர்வு பெற்றேன். திருவாரூர் கலெக்டராக இருக்கும் சி.நடராஜன், என்னை சில சட்டவிரோத வேலைகளை செய்ய சொன்னார். அதை செய்ய மறுத்ததால், என்னை அவதூறாக திட்டினார். இதன்பின்னர், காரணமே இன்றி என்னை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மாவட்ட கலெக்டராக இருக்கும் சி.நடராஜன், திட்டநிதிகளை தவறாக பயன்படுத்தி, ஏராளமான முறைகேடுகளில் <டுபட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நான் புகார் செய்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்காததால், இந்த ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், கலெக்டர் நடராஜன் மீதான குற்றச்சாட்டு குறித்து, ஒரு தனி கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கும் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியாக, கலெக்டர் சி.நடராஜனை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இவரை தேர்தல் அதிகாரியாக நியமித்தால், தேர்தலின் போது ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமாக செயல்படுவார். எனவே, மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல்பட சி.நடராஜனை அனுமதிக்க கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மார்ச் 4_ந்தேதி மற்றும் 12_ந்தேதி புகார் மனுக்களை அனுப்பி வைத்தும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, மாவட்ட தேர்தல் அதிகாரியாக அவர் செயல்பட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்து, மனுதாரர் கொடுத்துள்ள புகார் மனுவை இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்