முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி பிரச்சினை: கருணாநிதி சட்டமன்றத்தில் விவாதிக்க தயாரா?

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.16 - காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் பல துரோகங்களை கருணாநிதி இழைத்துள்ளார். இது குறித்து அவர் சட்டமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு விவாதிக்க தயாரா? என்று முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார். ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட `வடதண்டலம் கிராமம், செய்யார்_ஆரணி நெடுஞ்சாலை' என்ற இடத்திலும், வேலூரில் , `காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்' என்ற இடத்திலும் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:_

காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் பல துரோகங்களை செய்து இருக்கிறார் 

கருணாநிதி. கர்நாடகம் அணைகளை கட்டிக் கொள்ள அனுமதித்தது, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தன்னிச்சையாக வாபஸ் வாங்கியது, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது என அடுக்கிக் கொண்டே போகலாம்.  

கருணாநிதியின் சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். தேர்தல் முடிந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டப்பட்ட உடன், காவேரி நதிநீர்ப் பிரச்சனை குறித்து விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன். கருணாநிதியின் துரோகங்களை பட்டியலிட நான் தயாராக இருக்கிறேன். என் கட்சியின் சார்பில் நான் தான் பேசுவேன். இதே போல் 

கருணாநிதியும் வந்து  சட்டமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளத் தயாரா? 

தி.மு.க_வின் சார்பில் துரைமுருகனோ அல்லது வேறு பிரதிநிதிகளோ விவாதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனைத் கருணாநிதி ஏற்றுக்கொள்ளத் தயாரா? சட்டமன்றத்திற்கு வரத் தயாரா? என்னை நேருக்கு நேர் சந்தித்து விவாதிக்கத் தயாரா? இதனை கருணாநிதி ஏற்றுக் கொள்கிறாரா, இல்லையா? என்பது குறித்த அவருடைய முடிவை அவர் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் துரோகங்கள் இழைக்கப்பட்டது உண்மை தான் என்று கருணாநிதியே ஒப்புக்கொள்கிறார் என்று தான் அர்த்தம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது மின் உற்பத்தியை பெருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காதவர் கருணாநிதி. எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் பைகாரா புனல் மின் திட்டத்திற்கு மத்திய அரசு மூலம் தடை போட்டவர் கருணாநிதி. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்ற கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தவர் கருணாநிதி. காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதவர் கருணாநிதி. 

இப்படி தமிழகத்திற்கு துரோகத்தை மட்டுமே இழைத்த கருணாநிதி, அண்மையில் திருவா%ரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காவேரி பிரச்சனை குறித்து வாதம் செய்ய சட்டமன்றத்திலே நேரம் ஒதுக்கலாம். ஒதுக்கி, அதிலே விவாதித்து யார் தவறு செய்தார்கள்? யார் நியாயமாக நடந்து கொண்டார்கள்? யார் நம்முடைய உரிமைகளைப் பெற்றுத் தர முயற்சித்தார்கள்? என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு விளக்கட்டும் என்று கூறி இருக்கிறார். 

கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழ் நாட்டிற்கு எதையாவது செய்ததா? இல்லை.  'மக்கள் நலம்' 'மக்கள் நலம்' என்று சொல்லி உங்கள் வாக்குகளைப் பெற்றார் கருணாநிதி. ஆட்சியில் அமர்ந்ததும் உங்கள் நலத்தை மறந்துவிட்டார்.  இப்படிப்பட்ட திமுக இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும்.  இப்படிப்பட்ட கட்சிக்கு, திமுக_விற்கு இந்தத் தேர்தலில் நீங்கள் சம்மட்டி அடி கொடுக்க வேண்டும்; கொடுத்து விரட்ட வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்) 

உங்களின் ஆதரவோடு உங்கள் ஆட்சி மத்தியில் அமையப் பெறும் போது; 

இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், இறக்குமதியை தேவைக்கேற்ப செய்யவும்;  

விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வரவும்;

காவேரி முல்லைப் பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும்;  

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்;  

இலங்கை போரின் போது இனப் படுகொலை செய்தவர்களை ஐக்கிய நாடுகள் சபை மூலம் சட்டத்தின் முன் நிறுத்தி; தண்டனை பெற்றுத் தருவதற்கான தீர்மானத்தை இந்தியாவே முன்மொழியவும்; 

வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய ராணுவத்தை, தரைப்படையை, கப்பற் படையை, விமானப் படையை நவீனமயம் ஆக்கவும்;

தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை ஆக்கவும்; 

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அறவே ஒழியவும்; 

வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்கவும்; 

2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல் என காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு காரணமானவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரவும், இந்த ஊழல்கள் மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை <டு கட்டவும்; 

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றவும், பெட்ரோலியப் பொருட்களின் விலை ஓர் ஆண்டு முழுவதும் நிலையாக இருக்கவும்; 

தனி நபருக்கான வருமான வரி உச்ச வரம்பினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு வெள்ளையர்கள் விரட்டப்பட வேண்டும் என்ற மனநிலை மக்கள் மனங்களில் நிலவியது.  தற்போது   இந்தியாவை வேட்டைக் காடாக்கி, கொள்ளையடித்து, சின்னாபின்னமாக்கி, நாட்டையே சறையாடிய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்; எதிர்காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமைய விடக் கூடாது என்ற மன நிலையில் நீங்கள் எல்லாம் இருக்கிறீர்கள்.  இந்தியா முழுவதும் இதே நிலை தான் நிலவுகிறது. இந்திய விடுதலைக்கு முன் மக்கள் மனதில் இருந்த அதே மன நிலை இந்தியா சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் கழித்து தற்போது மக்கள் மனங்களில் மீண்டும் உருவாகியுள்ளது.  

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்