முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் தொகுதியில் எண்ணிறைந்த நலத்திட்டங்கள்: முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வசதிகளை கடந்த 34 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம்.  வேலூர் நகரத்தில் வட்ட மற்றும் ஆரச்சாலைகள் அமைப்பதற்கான திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன என்று முதல்வர் ஜெயலலிதா வேலூரில் எடுத்துரைத்தார். 

ஆரணி மற்றும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்டார். வேலூரில் அணைக்கட்டு ஒன்றியம்' இடையன்காடு ஊராட்சியில் உள்ள,  `காட்டுக்கொல்லை, என்ற இடத்தில் நடந்த பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் செங்குட்டுவனை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:_

வேலூர் மாவட்டத்தில் 250 கோழிகள் கொண்ட 270 பண்ணைகள் அமைக்கும் வகையில், 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாட்டு கோழி வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், 5,000 கோழிகள் கொண்ட 25 கறிக்கோழிப் பண்ணைகள் 51 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.  

வேலூர் மாவட்டம், உளி_வல்லத்தூர் சாலையில் ரயில்வே கடவு எண் 70_க்கு மாற்றாக, 14 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கீழ்பாலம், கண்ணாடிகுப்பம்_அய்யனார் சாலையில் ரயில்வே கடவு எண். 78_க்கு மாற்றாக 25 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வாளையம்பேட்டை_வாணியம்பாடி சாலையில் ரயில்வே கடவு எண் 80_க்கு மாற்றாக, 25 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சாலை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர, வேலூர் கன்டோன்மெண்ட்_கணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில், வேலூர்_ஒசர் சாலையில் ஒரு சாலை மேம்பாலமும்; 

லத்தேரி_விரிஞ்சிபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையில் டி.கே.வி. கோட்டா_விரிஞ்சிபுரம் சாலையில் ஒரு மேம்பாலமும் அமைக்க நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. வேலூர் வட்டத்தினை பிரித்து அணைக்கட்டு என்ற புதிய வட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. வேலூர் வட்டாரத்தில் உள்ள கொனவட்டத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் காகங்கரை ஏரிக்கு, குத்தூர் ஏரியிலிருந்து ஒரு புதிய வழங்கு வாய்க்கால் அமைக்கும் பணிக்காக 2 கோடியே 71 லட்சம் பொய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிக்கு உட்பட்ட குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள சீவூர் கிராமத்தின் அருகே, கௌண்டன்யா நதியின் குறுக்கே ஒரு தரைக் கீழ் தடுப்பு சுவர் கட்டும் பணி 3 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றது. குடியாத்தம் வட்டத்தில் பாலாற்றின் குறுக்கே கிணற்றுடன் கூடிய தரை கீழ் கால்வாய் கட்டமைப்பு 1 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.  குடியாத்தம் வட்டத்தில் உள்ள மோர்தானா அணை சீரமைக்கும் பணி 4 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 குடியிருப்புகளில் வசிக்கும் 18 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் 1,040 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

வேலூர் மக்களவைத் தொகுதியின் வளர்ச்சிக்காக, நலனுக்காக, பல்வேறு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago