முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் - ஆரணியில் 10 ஆயிரத்திற்கும் மேல் இணைந்தனர்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - வேலூர் _ ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அ.தி.முக.வில் இணைந்தனர். நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 24.4.2014 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் `வட தண்டலம் கிராமம், செய்யார்_ஆரணி நெடுஞ்சாலை' என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிப் பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்.

அப்போது, பொதுக்கூட்ட மேடையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், திமுக_வைச் சேர்ந்த, திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றிய முன்னாள் செயலாளர் கே. சங்கர், செய்யாறு நகர 20_ஆவது வார்டு உறுப்பினர்  சரஸ்வதி குமாரசாமி, மேற்கு ஆரணி ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் 

என். சரவணன், முருகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பி. குமரேசன், மேற்கு ஆரணி ஒன்றிய இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் பி. பாரி பாபு; 

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் சி. கைலாசம், திருவண்ணாமலை மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் எச். சாதிக் பாட்சா, ஆரணி ஒன்றியம், இராட்டிணமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் சி. எல்லம்மாள், ஆரணி ஒன்றியம், கனிஇலுப்பை ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா கிருஷ்ணன்; 

தேமுதிக_வைச் சேர்ந்த, வந்தவாசி நகர 9_ஆவது வார்டு உறுப்பினர் ஷீலாபானு இக்பால், அனக்காவூர் ஊராட்சி ஒன்றியக் குழு 11_ஆவது வார்டு உறுப்பினர் வாசுகி தூயமணி, வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு 8_ஆவது வார்டு உறுப்பினர் அம்சா, பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு 4_ஆவது வார்டு உறுப்பினர் கே. பிச்சாண்டி, ஆயிலவாடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாராயணமூர்த்தி, வெம்பாக்கம் ஒன்றிய விஜயகாந்த் மன்ற செயலாளர் என். பழனி, வந்தவாசி நகர இணைச் செயலாளர் ஏ.ஜி.எஸ்.அமீர், வந்தவாசி  ஒன்றியத் தலைவர் பன்னீர்; 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, வந்தவாசி நகர 14_ஆவது வார்டு உறுப்பினர் 

பி. பாலசுப்பிரமணியன், வெம்பாக்கம் ஒன்றியம், இருமரம் ஊராட்சி மன்றத் தலைவர் 

இ. பூபாலன், மதிமுக_வைச் சேர்ந்த மேற்கு ஆரணி ஒன்றியச் செயலாளர் எஸ்.சந்தானம், தமிழ்நாடு மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராதா கருணாகரன், மேற்கு ஆரணி ஒன்றிய வட்டாரத் தலைவர் கே.பி. நிர்மல்குமார்; விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியக் குழு 19_ஆவது வார்டு உறுப்பினர் பி. சந்திரா, தெள்ளார் ஊராட்சி ஒன்றியக் குழு 16_ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் பி. தனலட்சுமி மற்றும் வலியே வலிமை திண்டபண்ட சங்க மாநிலத் தலைவர் ஆர். ஜெயசீலன் உள்ளிட்ட 5,002 பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஆரணியில் இருந்து புறப்பட்டு வேலூர் சென்றடைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் `காட்டுக்கொல்லை, இடையன்காடு ஊராட்சி, அணைக்கட்டு ஒன்றியம்' என்ற இடத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சிப் பேருரையாற்றி வாக்கு சேகரித்தார்.

அப்போது, பொதுக்கூட்ட மேடையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், திமுக_வைச் சேர்ந்த, ஜோலார்பேட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் கே.சி.காமராஜ்ஞு, காக்கனாம்பாளையம் டி. செங்குட்டுவன், திருப்பத்தூர் நகர 1_ஆவது வார்டு உறுப்பினர் எல். ஜாஜினா, குடியாத்தம் ஒன்றிய வரதரெட்டிபள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமி, ஆலங்காயம் ஒன்றிய பீமகுளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பி.எஸ். சம்பத், சேண்பாக்கம் பேரொட்சி 4_ஆவது வார்டு செயலாளர் கே. மனோகரன், ஜோலார்பேட்டை ஒன்றிய அம்மையப்ப நகரைச் சேர்ந்த ஜி. ஜெயராமன், குடியாத்தம் ஒன்றிய புட்டவாரிப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் டி. முனிசாமி, திருப்பத்தூர் நகரத்தைச் சேர்ந்த எஸ். ஆலிவர் சாலமன், குடியாத்தம் ஒன்றியம், வரதரெட்டிபள்ளி ஊராட்சி துணைத் தலைவர் எம். முரளி; விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் தேசிய விடுதலை பேரவை முற்போக்கு மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் ஏ. தமிழ்குமரன்; பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த, 

2011_ஆம் ஆண்டு வேலூர் மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்ட வேட்பாளர்  எம். வெண்ணிலா, வேலூர் மாவட்ட வன்னிய இளைஞர் சங்கச் செயலாளர் ஏ. கமல், சேண்பாக்கம் பேரூராட்சி 10_ஆவது வார்டு செயலாளர் பி. ஆறுமுகம்;

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ஜோலார்பேட்டை நகரக் கமிட்டி தலைவர் கே.எஸ்.சிவப்பிரகாசம், வாணியம்பாடி நகர 13_ஆவது வார்டு உறுப்பினர் பி. நாசிர்உசேன், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி இளைடர் காங்கிரஸ் தலைவர் திருமதி தீபா பிரகாஷ், வாணியம்பாடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொன்.இளங்கோ, வேலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாலாஜி, திருப்பத்தூர் நகர இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆர். பழனிவேல், திருப்பத்தூர் நகர மாணவர் அணி தலைவர் ஜெ. சாதிக்பாஷா, சேண்பாக்கம் பேரூராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினர் எஸ்.டி.ஜெயபிரகாஷ்; மதிமுக_வைச் சேர்ந்த, பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் க. திருநாவுக்கரசு, வேலூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பி. செந்தில்குமார்; தேமுதிக_வைச் சேர்ந்த தலைமை பேச்சாளர் ஆர். அரிதாஸ்; கந்திலி ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் வி. மோகன், சேண்பாக்கம் பேரூராட்சி பிரதிநிதி கே. வேலு, பேர்ணாம்பட்டு நகர 2_ஆவது வார்டு சுயேட்சை உறுப்பினர் சி. அப்துல் அமீது உள்ளிட்ட 5,000 பேர் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

தாயுள்ளத்தோடு தங்களைக் கழகத்தில் இணைத்துக் கொண்டதற்காக, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை, அ.தி.மு.க.வில் இணைந்தவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago