முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணம் கொடுத்தாலோ - வாங்கினாலோ போட்டியிட தடை

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.16 - ஓட்டுக்காக பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அது நிரூபிக்கப்பட்டால் இரு தரப்பினருக்குமே ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். என்றுதலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார்    தெரிவித்தார் ,

சென்னையில் நிருபர்களுக்கு பிரவீன்குமார் அளித்த பேட்டி வருமாறு:_ 

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் 60 ஆயிரத்து 816 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒரு கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்படும். 15 வாக்காளர்கள் வரை போட்டியிடும் தொகுதியில் ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பொருத்தப்படும். அதற்கும் கூடுதலாக வாக்காளர்கள் போட்டியிட்டால், அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக பொருத்தப்படும்.

தமிழகத்தில் தற்போது 70 ஆயிரம் கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1.25 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்களும் உள்ளன. தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரத்து 500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றாக்குறை உள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பக்கத்து மாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் பெறப்பட்டு பற்றாக்குறை நிறைவு செய்யப்படும். 

தற்போது ஐதராபாத்தில் இருந்து 2,013 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளன. இவை, தென்சென்னை, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களிலுள்ள வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும். ஓட்டுப்பதிவு அன்று, கட்டுப்பாட்டு எந்திரம் மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்களில் 10 சதவீதம், தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். ஏதாவது வாக்குச்சாவடிகளில் உள்ள அந்த எந்திரங்களில் தொழில்நுட்ப பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினை ஏற்பட்டால், அதிலிருந்து எந்திரங்கள் எடுத்து, பயன்பாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும்.

தற்போது காப்பு அறைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் நடத்தப்பட்டு அவை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். பின்னர், அந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்காளர்களின் பெயர், சின்னம் அடங்கிய சீட்டு ஒட்டப்படும். வாக்காளர்களின் பெயர், சின்னம் அடங்கிய சீட்டு ஒட்டும்பணி 17_ந் தேதி தொடங்கி 20_ந் தேதி நிறைவு பெறும்.

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 1950 என்ற இலவச போன் எண்ணுக்கு இதுவரை 62 ஆயிரத்து 240 புகார்கள் வந்தன. அவற்றில் 8,661 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 ஆயிரம் புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பூத் சிலிப்கள் வழங்கும் பணி 19_ந் தேதி வரை நடக்கும். இந்த பணியின்போது, தேர்தல் பணியாளர்களுடன் அரசியல் கட்சி ஏஜெண்டுகள் வேண்டுமானால் செல்லலாம்.

இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

இந்த நிலையில் மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் சார்பில் பிரவீன்குமாரிடம் மூத்த வக்கீல் சண்முக சுந்தரம் புகார் ஒன்றை கொடுத்தார். 

இதுகுறித்து கேட்டபோது பிரவீன்குமார், ''ஓட்டுக்காக பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். அது நிரூபிக்கப்பட்டால் இரு தரப்பினருக்குமே ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும். அதோடு, வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதோடு, 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாது. இந்த புகாரில் உண்மை இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்'' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago