முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் மோடி படத்துடன் 5 ஆயிரம் சேலைகள் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

பெங்களூர், ஏப்.16 - கர்நாடகத்தில் நரேந்திர மோடி படத்துடன் கூடிய 5 ஆயிரம் சேலைகள், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். 

கர்நாடகத்தில் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் யாதகிரி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் 7 பேர், யாதகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள குருநாத் ரெட்டி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சோதனை நடத்தினர். 

இதில் அங்கு மூட்டைகளிலும், அட்டைப் பெட்டிகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,500 ‘நமோ மந்திரா' புடவைகளை பறிமுதல் செய்தன‌ர். காட்டன், சில்க் உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் கொண்ட இந்தப் புடவைகளின் அட்டைப் பெட்டிகளில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் படம் பொறிக்கப்பட்டிருந்தது. 

இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், “இப்பகுதியில் பெண் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்தப் புடவைகளை பதுக்கி வைத்திருந்தாக தெரிகிறது. மாவட்ட பாஜக பிரமுகர் ஒருவரின் வேண்டுகோளின்படி, குருநாத் தனது இல்லத்தில் வைத்திருந்ததாக சொல்கிறார். 3,500 புடவைகளுக்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் குருநாத் ரெட்டியை கைது செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர். 

இதேபோல கர்நாடக மாநிலம் கோலாரில் லாரியில் கொண்டுசெல்லப்பட்ட 1,835 நமோ புடவைகள், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பாத்திரங்களை உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

இது தொடர்பாக ஒருவரை கைது செய்த போலீஸார், இந்தப் புடவைகள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago