முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தான் அமைச்சர் மர்ம நபர்களால் கடத்தல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், ஏப்.16 - ஆப்கானிஸ்தான் பொதுப் பணித் துறை துணை அமைச்சர் பணிக்கு செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது குறித்து காபூல் காவல்துறை அதிகாரி குல் அகா ஹஸ்மி கூறுகையில், காபூல் பொதுப் பணித் துறை துணை அமைச்சர் அகமது ஷா, பணிக்கு செல்லும் வழியில் அவரது காரை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டனர். 

அப்போது, காரின் ஓட்டுனர் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக காரை வேகமாக ஓட்டினார். இருப்பினும், கடத்தல்காரர்கள் காரை மறித்து அமைச்சரை தாக்கி, அவரை தங்களது வாகனத்தில் ஏற்றி சென்றனர். 

இந்தச் சம்பவத்தில் அமைச்சரின் வாகன ஓட்டுனர் காயமடைந்தார். இதுவரை கடத்தலில் ஈடுப்பட்டவர்கள் குறித்து தகவல் ஏதும் அறியப்படவில்லை" என்றார் அவர

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்