முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வம்சாவளி கவிஞர் சேஷாத்ரிக்கு புலிட்சர் பரிசு

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஏப்.16 - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் சேஷாத்ரி 2014ம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசை வென்றுள்ளார். அவர் எழுதிய "3 செக்‌ஷன்ஸ்" என்ற கவிதைத் தொகுப்பிற்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. 

நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நேற்று 98வது புலிட்சர் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. 

"விஜய் சேஷாத்ரி எழுதிய 3 செக்‌ஷன்ஸ் என்ற கவிதை தொகுப்பு மனித உணர்வுகளை பிறப்பிலிருந்து, நோய்வாய்ப்படும் வரை, நகைச்சுவையாகவும் சோகமாகவும், கருணையாகவும், இரக்கமின்றியும் ஆராய்கின்றன என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொலம்பியா பல்கலை.யின் முன்னாள் மாணவரான சேஷாத்ரி 10,000 அமெரிக்க டாலர்களை பரிசுப் பணமாக பெறவுள்ளார். 

புலிட்சர் இணையதளத்தில், சேஷாத்ரி தற்போது நியூயார்க்கின் சாரா லாரன்ஸ் கலைக் கல்லூரியில் கவிதை மற்றும் கதை எழுதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெங்களூரில் 1954-ஆம் ஆண்டு பிறந்த சேஷாத்ரி, தனது ஐந்தாம் வயதில் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார். ஒஹியோவின் கொலம்பஸ் பகுதியில் வளர்ந்தார். 

சேஷாத்ரி இதுவரை தனது கவிதைக்காக பல்வேறு பரிசுகள், மானியங்கள் மற்றும் கொடைகளை அமெரிக்காவில் வென்றுள்ளார். சேஷாத்ரி, புலிட்சர் பரிசு பெறும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஐந்தாவது எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்