முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியாங்கா வரம்பு மீறுகிறார்: வருண் காந்தி தாக்கு

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

சுல்தான் பூர், ஏப்.16 -  உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, வருண்காந்தி தங்கள் குடும்பத்தை சேர்ந்தவர் என்ற போதிலும் தவறான பாதையில் செல்வதாக குற்றம்சாட்டினார். 

குடும்பத்தில் உள்ள இளையவர்கள் தவறான பாதையை தேர்ந்தெடுக்கும்போது, குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் அவர்களுக்கு சரியான முறையில் அறிவுரை கூறி வழிநடத்த வேண்டும் என்றும், அதன்படி தவறான அரசியல் பாதையில் சென்றுவிட்ட தனது சகோதரர் வருண் காந்திக்கு சரியான பாதையைக் காட்ட வேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார். 

இந்த நிலையில் சுல்தான்பூரில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த பாஜக வேட்பாளர் வருண் காந்தி, "தனிப்பட்ட ஒரு நபர் எந்த பாதையில் செல்கிறார் என்பதைவிட, நாடு எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதே மிக முக்கியம்" என்று பிரியங்காவின் பேச்சுக்கு பதில் அளித்தார். 

வருண் காந்தியின் இந்தப் பேச்சு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா, "வருண்காந்தி எங்கள் குடும்பத்திற்கு துரோகம் செய்துவிட்டார். இந்த நாட்டின் ஒற்றுமைக்காக தனது உயிரை கொடுத்தவர் எனது தந்தை. அந்த எங்கள் குடும்பத்தின் தியாகத்தை மறந்தும், எல்லையை மீறி சென்று அவமரியாதை செய்யும் எவரையும் அனுமதிக்க முடியாது" என்று கூறினார். 

இதற்கு பதிலடி தரும் விதமாகவே வருண் காந்தி கூறும்போது, "பிரியங்கா காந்தி வரம்பு மீறிப் பேசுகிறார். யாரும் தங்களது மதிப்பை உயர்த்திக் கொள்ள, பிறரை தாழ்த்திப் பேசக் கூடாது" என்றார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago