முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜ தலைமையில் அமைந்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஏப்.16 - தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் 3 வது முறையாக ஆட்சி அமைக்கும்.காங்கிரஸ் எதிரி அணியில் உள்ள பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் மோடியை பற்றியும், குஜராத் வளர்ச்சி பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்களை மக்கள் மத்தியில் பாஜக பரப்பி வருகிறது. உண்மை தன்மை பற்றி பகிரங்கமாக விவாதிக்க பாஜக தயாராக இல்லை.இந்தியாவில் குஜராத் பற்றியும், அந்த மாநில ஆட்சி பற்றியும் உண்மையை  விளக்க அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் குறிப்பிடும் மோடி பற்றிய எந்த தகவலும உண்மை இல்லை.குஜராத் வளர்ச்சி பற்றி கூறுவதும் உண்மை இல்லை.குஜராத் தொழில் வளர்ச்சியில் 5 வது இடத்தில் உள்ளது.ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கட்டமைப்பை ஏற்படுத்தி இருந்தது.ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் குஜராத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை.குஜராத்தில் 27 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர்.குஜராத்தில் பெரும் முதலாளிகளுக்கு விவசாய நிலங்களை 1000 ம் ஏக்கர் கணக்கில் வாங்கி கொடுத்துள்ளனர்.விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொதை கூட வழங்கப்படவில்லை. குஜராத்தில் விவசாய வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு எதையும் செய்யவில்லை.மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டம் கூட அங்குள்ள மக்களுக்கு 40 சதவீதம்தான் வழங்கப்படுகிறது. தமிழகம்,பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 80 முதல் 90 சதவீதம் வரை வழங்கப்படுகிறது.குஜராத் மின் உற்பத்தியில் மிகை மாநிலம் என்கிறார்கள். அவர்களது தேவை 10000 மெகாவாட்தான்.மின் உற்பத்தி 12,000 மெகாவாட். 2000 மெகாவாட் மின்சாரத்தை அவர்கள் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்கிறார்கள்.மோடி உண்மையில் மாயை.தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள வைகோ சேது சமுத்திர திட்டம் வேண்டும் என்கிறார்.தமிழகத்தில் அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாஜக தான். தமிழகத்தில் பாஜக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி.பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இந்தியா முழுவதும் ஒரே சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும், ராமர் கோவில் கட்டப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது நடைபெறாது.மோடி பிரதமரானால் இந்தியாவில் பெரும் முதலாளிகள்தான் வாழ்வார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் ஆச்சரியப்படும் அளவிற்கு காங்கிரஸ் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநகர் மாவட்ட தலைவர் ஜெயப்பிரகாஷ்,கிழக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ்,மேற்கு மாவட்ட தலைவர் எடப்பாடி கோபால் உள்பட பலர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்