முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் - கிருஷ்ணகிரியில் இன்று மாலை மோடி பிரச்சாரம்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சேலம் ஏப்.16 - சேலம் மற்றும் கிருஷ்ணகிரியில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று மாலை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜக கூட்டணியை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் அவர் பிரச்சாரம் செய்கிறார். ஏற்கனவே முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மோடி சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து தமிழகத்தில் அவர் 2 வது கட்ட பிரச்சாரத்தை இன்று துவக்குகிறார்.முதலில் அவர் கிருஷ்ணகிரியில் போட்டியிடும் பாஜக கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணியை ஆதரித்து பேசுகிறார். பின்னர் சேலத்தில் தேமுதிக கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷை ஆதரித்து பேசுகிறார்.பின்னர் கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அவர் பேசுகிறார்.

இதற்காக அவர் பெங்களூரில் இருந்து ஹெலிகாப்படர் மூலம் கிருஷ்ணகிரி வருகிறார். அங்கு பாமக வேட்பாளர் ஜி.கே.மணியை ஆதரித்து பேசுகிறார்.பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மாலை 5 மணிக்கு சேலம் வரும் அவர் சேலம் இரும்பாலை ஹெலிபேடு தளத்தில் இறங்குகிறார். பின்னர் இரும்பாலை வித்யா மந்திர் பள்ளி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கோண்டு பேசுகிறார்.

இதையொட்டி அங்கு பிரசார மேடை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்த பணிகளை பாஜக கோட்ட பொறுப்பாளர் முருகேசன், மாவட்ட தலைவர் அண்ணாதுரை,தேமுதி எம்.எல்.ஏ.க்கள் மோகன்ராஜ்,எஸ்.ஆர்.பார்த்தீபன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பாதுகாப்பிற்காக கூட்டம் நடைபெறும் பகுதியை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.தடவியல் நிபுணர்கள் சோதனையும், மோப்பநாய் சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கூட்டம் நடைபெறும் இடம் கொண்டுவரப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணிகள் மத்திய மண்டல ஐ.ஜி.ராமசுப்பிரமணியன்,சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ்,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் மோடியுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த கூட்டத்தை முடித்துக் கொண்டு மோடி ஹெலிகாப்டர் மூலம் கோவை பிரச்சாரத்திற்கு செல்கிறார்.      

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்