முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 25 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

திருமலை, ஏப்.16 - தமிழ் புத்தாண்டு தினத்தையோட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் 25 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டையோட்டி தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க் வந்திருந்தனர். இதனால், இலவச தரிசனத்தில் அனுமதிக்கப் படும் வைகுண்டம் அறைகளில் 32 அறைகளும் நிரம்பியது. இதனால் பக்தர்கள் 20 முதல் 25 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமேட்டு மலைப்பாதை வழியாக பாதயாத்திரையாக வந்த பக்தர்களுக்கு வழங்கப்படும் திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.300 க்கான சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

மேலும், இலவச தரிசனம் மற்றும் மலைப்பாதை வழியாக பாதயாத்திரை வந்த பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்ததால் ரூ.300 டிக்கெட் விற்பனை நேற்றைய முன்தினம் மத்தியம் 12.30 மணியுடன் நிறுத்தப்பட்டது. தங்கும் அறைகள் பெற முடியாமலும் பக்தர்கள் அவதிப்பட்டனர். பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.2.30 கோடி வசூலானது தெரியவந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமிக்கு முன்னதாக வரும் 3 நாட்கள் வசந்த உற்சவமாக நடத்தப்படுகிறது. இந்த உற்சவத்தில் தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சுவாமி வீதியுளாவும் நடந்தது.

3வது நாள் அன்று மலையப்பசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாகவும், சீதா, ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர், ருக்மணி, சமேத கிருஷ்ணர் ஆகியோர் கோவிலிலிருந்து ஊர்வலமாக நான்கு மாட வீதிகளில் வலம் வந்து வசந்த மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டன். இதையடுத்து, வசந்த உற்சவ விழா நிறைவடைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்