முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு முக்கிய குற்றவாளி கொலை

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஏப் 16 - பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்துபாண்டியன் என்பவர் மதுரை அழகர்கோவிலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

திண்டுக்கல் அருகே உள்ள கரட்டழகன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துபாண்டியன்(40). திண்டுக்கல் யூனியன் கவுன்சிலராக உள்ளார். சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற முத்துபாண்டியன், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் ஆவார். 

பசுபதி பாண்டியன் கடந்த 10.1.2012ம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முத்துபாண்டியன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் இவரை பசுபதி பாண்டியனின் ஆதரவாளர்கள் தேடி வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு வந்த முத்துபாண்டியனை பசுபதி பாண்டியன் கோஷ்டியினர் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர். அப்போது முத்துபாண்டியன் அதில் இருந்து தப்பி விட்டார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முத்துபாண்டியன் மதுரை அருகே உள்ள அழகர்கோவில் பகுதியில் தனக்கு சொந்தமான நிலத்தை பார்ப்பதற்காக ஜீப்பில் வந்தார். அவருடன் தாமரை செல்வன், கண்மணி, மகுடீஸ்வரன் ஆகியோரும் வந்தனர். 

அழகர்கோவில் 18ம் படி கருப்பணசுவாமி கோயில் அருகே முத்துபாண்டியன் ஜீப்பில் சென்ற போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து கண்மூடித்தனமாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த முத்துபாண்டியன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். அவருடன் வந்தவர்கள் வெட்டுக் காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இந்த கொலை குறித்து ஊமச்சிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்