முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நதிகள் தேசியமயமாக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, ஏப்.16 - தமிழகத்தில் வரும் 24_ந் தேதி பாராளூமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மதுரை ஆதீனம் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து வருகிறார். இவர் திருச்சி மலைக்கோட்டை பகுதி சறுக்குபாறை அருகே நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது மதுரை ஆதீனம் பேசியதாவது,

இந்த நாட்டில் தீவீரவாதம் ஒழிய, விலைவாசி குறைய நதிகள் தேசியமயமாக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அருடைய ஜாதகத்தில் இருக்கிறது. கண்டிப்பாக தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா பிரமராக வருவார்.

முன்பு இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய தகுதி காமராஜர், ஜி.கே.மூப்பனார் ஆகியோருக்கு இருந்தது. ஆனால் அவர்கள் முயற்சிக்கவில்லை. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்பு இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும். அதற்கு அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 கூட்டத்தில் அரசு தலைமை கொறடா மனோகரன், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பரஞ்சோதி, துணைமேயர் ஆசிக் மீரா, கோட்டத்தலைவர்கள் சீனிவாசன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், அய்யப்பன், சுதாகர், தமிழரசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்