முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்வி கடன் வட்டி தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த தடை

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப் 16 - பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை கல்வி கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

மக்களவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 2009ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு பெறப்பட்ட கல்வி கடனுக்கான வட்டி தொகை 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ. 2,600 கோடியாக உள்ளது என்றும் அதனை மத்திய அரசு தள்ளுபடி செய்கிறது என்றும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மக்களவைக்கான தேர்தல் நடைபெறுவதால் அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் கூறுகையில், 

மக்களவை தேர்தல் நடவடிக்கை முடிந்த பிறகு கல்வி கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டத்தை செயல்படுத்தும்படி மத்திய நிதியமைச்சகத்தை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் காலங்களில் இந்த திட்டம் குறித்து விளம்பரப்படுத்த கூடாது என்றும் மத்திய நிதியமைச்சகத்தை தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது என்று அந்த தகவல்கள் தெரிவித்தன. 

மக்களவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 16ம் தேதி எண்ணப்படுகின்றன. எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அடுத்த மாதம் 17ம் தேதிக்கு பிறகுதான் கல்வி கடனுக்கான வட்டி தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்