முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் அகற்றம்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

தி ஹேக், ஏப் 16 - சிரியாவில் இருந்து விஷவாயு மற்றும் மயக்க மருந்து உள்ளிட்ட ரசாயன ஆயுதங்கள் பெருமளவில் அகற்றப்பட்டு விட்டதாக சர்வதேச ரசாயன ஆயுத கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ரசாயன ஆயுத தடை அமைப்பு கூறியிருப்பதாவது, 

உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட சிரியா நாட்டில் உள்ள லடாகியா துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் 13வது லோடு ரசாயன ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டன. மொத்தமுள்ள ரசாயன ஆயுதங்களில் 65 சதவீதம் அகற்றப்பட்டு விட்டது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. 

சிரியாவின் இந்த நடவடிக்கையை ரசாயன ஆயுத தடை அமைப்பின் தலைவர் அகமது சும்கு வரவேற்றுள்ளார். இது போன்று சிரியாவில் அடிக்கடி அதிகளவில் ரசாயன ஆயுதங்கள் அகற்றப்பட்டு வரும் ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் மொத்தமுள்ள ரசாயன ஆயுதங்களும் அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்