முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருளாதாரக் கொள்கையில் காங்.,-பா.ஜ ஒன்றே: பிருந்தா

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

திருச்சி, ஏப்.16 - பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் காங்கிரஸ் கட்சிக்கும்,   பா.ஜ.க.வுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று பிருந்தா காரத் கூறினார். திருச்சி தென்னூர், ஆழ்வார்தோப்பு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஸ்ரீதரை ஆதரித்து பிருந்தா காரத் பேசியதாவது:         

சாதாரண மக்களும், ஏழைகளும், தொழிலாளர்களும், விவசாயிகளும் பங்கேற்க முடியாத தேர்தலாக நம்முடைய தேர்தல் முறை மாறிவி்ட்டது. நாட்டிலுள்ள வெறும் 70 பேர் மட்டும் 20 லட்சம் கோடிகளை வைத்திருக்கின்றனர். ஆனால் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் மக்கள் தினமும் வெறும் 50 ரூபாய் மட்டுமே செலவிடத் தகுதியுள்ளவர்களாக உள்ளனர்.

பணக்காரர்கள் மேலும் பணக்காரர் களாக மாறிக்கொண்டே இருக்கி றார்கள். ஏழைகள் பரம ஏழைகளாகவே இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இந்த நிலை?. வேறு எதுவும் இல்லை. காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளின் கொள்கைகள்தான் இதற்குக்காரணம். பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கிடையே பொருளாதாரக் கொள்கைகளில் எந்த வி்த்தியாசமும் இ்ல்லை. இதை மாற்ற வேண்டும். இந்த தேர்தல் தலைவர்களை மாற்றும் தேர்தல் அல்ல. கொள்கைகளை மாற்றும் தேர்தல் என்றார் பிருந்தா காரத்.

    

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்