முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதிஷ்குமாரின் ஐ.ஜனதா தளத்துக்கு 4 இடங்களே கிடைக்கும்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஏப்.16 - பீகாரில் நிதிஷ்குமாரின்  ஐக்கிய ஜனதா தளத்துக்கு 4 இடங்களே கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவி்க்கப் பட்டுள்ளது. பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்டதால் அவருக்கு இந்த  பின்டைவு ஏற்படும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரிவி்க்கப்பட்டுள்ளது. 

பீகாரில் நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக பா.ஜ.க. கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டார். பாஜக பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்ததை இவர் எதிர்த்தார். இதையடுத்து உறவு முறிந்தது.  இப்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. பாஜகவுடனான உறவு முறிந்ததால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 3-வது இடத்துக்கு தள்ளப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று என்.டி.டி.வி. நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பீகார் மாநிலத்தில்  40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.  இங்கு பாஜக கூட்டணி  24 தொகுதிகளிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 12  தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 4 இடங்களும் கிடைக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த தேர்தலில் 12 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக இந்த தடவை 24 தொகுதிகளில் வெற்றிபெறும்.கடந்த தேர்தலில்  ஆளும் ஐக்கிய ஜனதா கட்சி 20 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக கூட்டணியை இழந்ததால் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று  அந்த அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

       

 

 

    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்