முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுக ஓட்டுக்களை எதிர்ப்பு ஓட்டுக்களாக மாற்ற அழகிரி உத்தரவு

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


மதுரை, ஏப் 17 - திமுக ஓட்டுக்களை எதிர்ப்பு ஓட்டுக்களாக மாற்றும் பணியில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு மு.க. அழகிரி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க. அழகிரி முதலில் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். தொடர்ந்து அவர் கட்சியை விமர்சனம் செய்ததால் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பிறகு இன்று வரை கட்சி மேலிடத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார் அழகிரி.
திமுகவில் பணம் கொடுத்தவர்களுக்கே சீட் தரப்பட்டுள்ளது என்று துவக்கத்தில் குற்றம் சாட்டிய அழகிரி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார். கட்சித் தலைவர் கருணாநிதிக்கு தெரியாமலேயே எல்லா விஷயங்களும் நடக்கின்றன என்று கூறிய அழகிரி, கருணாநிதியை நான் சந்தித்தால் அவரையும் கட்சியில் இருந்து நீக்கி விடுவார்கள் என்றும் ஒரு கட்டத்தில் கிண்டலாக கூறினார்.
மு.க.ஸ்டாலினையும் அழகிரி விட்டு வைக்கவில்லை. ஒரு வில்லன் போல் ஸ்டாலின் செயல்படுவதாக மு.க. அழகிரி பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். மேலும் இந்த தேர்தலில் திமுகவை வீழ்த்த என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார் அழகிரி. ஊர் ஊராக சென்று தனது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகிறார்.
அழகிரியை பல்வேறு தலைவர்களும் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர். ஆனால் யாருக்கு ஆதரவு என்பதை அழகிரி இன்னமும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் மதுரை மாநகர் மாவட்ட கலைக்கப்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களை அழைத்து மு.க. அழகிரி ஆலோசனை நடத்தினாராம். அந்த ஆலோசனை கூட்டத்தில் அழகிரி கீழ்க்கண்டவாறு பேசியதாக கூறப்படுகிறது. அழகிரி பேச்சின் விபரம் வருமாறு:
எந்த தவறும் செய்யாத நம்மை கட்சி பொறுப்புகளில் இருந்து திமுக தலைமை நீக்கி இருக்கிறது. எனவே உங்கள் பகுதிகளில் திமுகவுக்கு விழும் ஓட்டுக்களை எல்லாம் மாற்ற வேண்டும். இதன் மூலம் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும். மதுரையில் திமுக நான்காவது இடத்துக்கு தள்ளப்பட வேண்டும். உங்களால் எத்தனை திமுக ஓட்டுக்களை எதிர்ப்பு ஓட்டுகளாக மாற்ற முடியுமோ அதற்கான பணிகளை தீவிரமாக செய்யுங்கள்.
மதுரை தொகுதியை பொறுத்தவரை குறைந்தது ஒரு லட்சம் திமுக ஓட்டுக்களையாவது எதிர்ப்பு ஓட்டுகளாக மாற்ற வேண்டும். இவ்வாறு பேசிய அழகிரி, ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து அந்தந்த பகுதிகளில் எவ்வளவு ஓட்டுக்களை திமுகவுக்கு எதிராக மாற்ற முடியும் என்ற விபரத்தையும் கேட்டறிந்தாராம்.  
மு.க. அழகிரியின் இந்த அதிரடி உத்தரவு தென் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago