முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணப் பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக 5,360 குழுக்கள்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப். 17 - நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க கூடுதலாக 5,360 குழுக்கள் பிரவீண்குமார் பேட்டிஅளித்துள்ளார். இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:_
மக்களிடையே தேர்தலில் ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நடிகர்_ நடிகைகள் மட்டுமின்றி நானும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோவில் பேசி இருக்கிறேன்.
பஸ்களிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்ட இருக்கிறோம். தேர்தலில் பணம் விநியோகிப்பதாக பல்வேறு புகார்கள் வருவதால் ஏற்கனவே பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்துகிறார்கள். கண்காணிப்பு குழுவினரும் அவ்வாறு சோதனை போடுகிறார்கள்.
வருகிற 20_ந்தேதியில் இருந்து 10 பூத் அடங்கிய பகுதியை ஒரு மண்டலமாக பிரித்து அதற்கு ஒரு அதிகாரி, உதவியாளர்கள், 3 போலீசார் நியமிக்கப்பட்டு அவர்களும் சோதனை நடத்துவார்கள். மொத்தம் 5,360 மண்டலங்களில் இதே போல் அங்காங்கே சோதனை நடத்தப்படும். இதற்காக அந்த மண்டலங்களில் கூடுதலாக 5,360 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தேர்தலில் ஓட்டுப் போடுவதை வலியுறுத்தி ஓட்டுப்பதிவுக்கு முதல் நாள் செல்போனில் நாளை ஓட்டுப்போடுங்கள் என்று தகவல் அனுப்பப்படும். ஓட்டுப்பதிவு அன்றும் நினைவு படுத்துவோம். டி.வி.க்களிலும் விளம்பரப்படுத்தப்படும். தேர்தல் கமிஷனில் 60 லட்சம் மொபைல் எண்கள் உள்ளன. அவற்றின் மூலம் தகவல் அனுப்பப்படும்.
பொதுக்கூட்டங்களுக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருவதாக புகார் வருவதால் அதுபற்றி கிராமங்களிலும் கண்காணிக்கிறோம்.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுபவர்கள் கையெழுத்து போட்டுவிட்டு பிரசார கூட்டத்துக்கு சென்று விட்டார்களா? என்று சோதனை நடத்துகிறார்கள். இதற்காக அதிகாரிகள் அங்குள்ள பதிவேட்டை சரிபார்த்து கண்காணிப்பார்கள்.
தேர்தல் விதி மீறல் தொடர்பாக 84,600 புகார்கள் வந்துள்ளன. சராசரியாக ஒரு நாளைக்கு 4,000 புகார்கள் வருகிறது. புளியங்குடியில் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் ரூ.1 கோடி இருந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு கணக்கு இருக்கிறதா? என்று விசாரணை நடக்கிறது.
ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களை எங்கள் பகுதிக்கு வரக்கூடாது என்று தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. பொது இடத்தில் பிரசாரம் செய்ய, ஊருக்குள் சென்று ஓட்டு கேட்க எல்லோருக்கும் உரிமை உண்டு. அதை யாராலும் தடுக்க முடியாது.
வேட்பாளர்களை யாரும் தாக்கினால் அவர்கள் உடனே கைது செய்யப்படுகிறார்கள். அந்தப் பகுதியில் வேட்பாளருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்