முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தேர்தல் விதி மீறல்: 40 பேர் மீது வழக்கு

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப். 17 - கடைபிடிக்கப்படுகிறதா? என்பது பற்றி பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.குறிப்பாக போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் வகையில், சாலையோரங்கள் மற்றும் சாலை தடுப்புகளில் பேனர்கள், கட்அவுட்டுகள் ஆகியவை அனுமதியில்லாமல் வைக்கப்படுகிறதா? என்பதை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களில் 100 மீட்டருக்கு உட்பட்ட பகுதியிலேயே பேனர், கொடிகளை கட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இதை மீறுபவர்கள் மீதும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இதுநாள் வரை, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அரசியல் கட்சியினர் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக தி.மு.க.வினர் மீது 20 வழக்குகள் போடப்பட்டுள்ளன. தே.மு.தி.க. வினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும் தலா 2 வழக்குகளும், காங்கிரஸ் கட்சி மீது ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்