முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்., - திமுகவிற்கு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப்.17 -  தமிழக பட்டாசு தொழிலை ஒழிக்க,சீன பட்டாசு இறக்குமதிக்கு காரணமான காங்கிரஸ்_திமுகவிற்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வலியுறுத்தி வருகின்றார்.
  விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்னுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில்  4_வது நாளாக தேர்தல் பிரச்சாரம் செய்தார். தெற்கு ஆணைக்கூட்டம், வெற்றிலையுரணி, மேலஓட்டம்பட்டி. வெம்பக்கோட்டை, குகன்பாறை உட்பட பல்வேறு கிராமங்களில்  விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் செய்தி_விளம்பரம் மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
  தேர்தல் பிர்ச்சாரம் செய்யும் கிராமங்களில் டாக்டர் அம்பேத்கார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் உட்பட தேசத்தலைவர்களின் திருவுருவ சிலைகளுக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் பேசும்போது:_
  தமிழகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் மத்திய அரசு செயற்கையான மின்வெட்டை உருவாக்கி வருகின்றது. தமிழக அரசிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. தற்போது செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள மின்வெட்டிற்கு திமுகவும் துணையாயிருக்கின்றது,. செயற்கையான மின்வெட்டை உருவாக்கி அதிமுகவை வீழ்த்த நினைக்கும் எந்த கட்சியும் டெபாசிட் கூட வாங்க முடியாது. நாட்டு மக்கள் அதிமுக அரசின் பின்னால் உள்ளனர். சுயநலம் இல்லாமல் பொது நலத்தோடு செயலாற்றி வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த நாட்டின் பிரதமராவது உறுதி.
  நாட்டின் பிரதமராக தமிழக முதல்வர் வந்தால்தான் தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு தொழில்துறை முன்னேறும். 15 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தமிழக நலனுக்காக எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. சீன பட்டாசு இந்தியாவில் அனுமதித்ததால் சிவகாசி பட்டாசு தொழில் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீன பட்டாசு இறக்குமதிக்கு காரணமான காங்கிரஸ்_திமுகவிற்கு வரும் தேர்தலில் வாக்காளர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். சீன பட்டாசிற்கு அனுமதி வழங்க கூடாது என்றும் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுத்து வருகின்றார்.
  பட்டாசு தொழிலுக்கு என்றும் பாதுகாப்பாக இருக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். வாரந்தோறும் பெட்ரோல், டிசல் விலையை காங்கிரஸ் அரசு உயர்த்தி கொண்டே சென்ற போது கூட்டணியில் இருந்த திமுக தனது சுய நலத்திற்காக எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் காத்தது. பெட்ரோல், டிசல் விலை உயர்வால் நாட்டின் அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து விட்டன. மத்திய் அரசின் அனைத்து தவறான முடிவிற்கும் உடந்தையாக இருந்த திமுகவிற்கு, தமிழக முதல்வரை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. நாட்டை ஆளும் தகுதி அதிமுகவிற்கு மட்டுமே உண்டு. இந்த தேர்தல் சுய நலத்திற்கும் பொது நலத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். பொது நலத்தோடு கடமையாற்றி வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா நாட்டின் பிரதமராவதை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது என்று பேசினார்.
தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்