முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க தேசத்தை பிரித்தாள நினைக்கிறது: சோனியா

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


நாகர்கோவில்:ஏப்-17 - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று அவர் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வநதார்.பழைய பஸ்நிலையம் அருகில் அரசு விருந்தினர் மாளிகையில் உள்ள ஹெலிபேடில் மதியம் 12.15மணிக்குவந்துஇறங்கினார் அவரை காங்கிரஸ்நிர்வாகிகள் வரவேற்றனர்.அங்கிருந்து சோனியா கார் மூலம் பொதுக்கூட்ட மைதானத்திற்குவந்தார். பொதுக்கூட்ட மைதானத்திற்கு காரில் வந்து இறங்கிய சோனியா காந்தியை தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மற்றும் வேட்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் வரிசையில் நின்று வரவேற்றனர். அவர்கள் வரவேற்பை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்ட சோனியா காந்தி மேடையை நோக்கி விரைந்தார்.
மேடை ஏறியதும அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் அவர் தமிழகத்தில் போட்டியிடும் 39 காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் ஆதரவு கேட்டு பேசினார். அவர் பேசியதாவது:-
நாட்டின் தென்கோடி முனையான புண்ணிய பூமியாம் கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். வீர துறவி விவேகானந்தர் இங்கு அமர்ந்துள்ளார். நாட்டின்மிகப்பெரிய தலைவர்களில் ஒருவரான காமராஜர் இங்கிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆதரவு அளித்த இந்த பூமியில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை நிறைவேற்றி உள்ளது. குறிப்பாக உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது இந்தியாவின் பொருளாதாரத்தை 7.5 சதவீதமாக நிலை நிறுத்தி சாதித்து காட்டியது இந்த அரசு.
10 ஆண்டுகளில் கல்வி, தொழில், மருத்துவம், உயர் கல்வி, சாலை அமைப்பு, துறைமுக வசதி, மின்சார உற்பத்தி என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். நாடுமுழுவதும் செயல்படுத்தப்பட்டதிட்டங்களில் குறிப்பாக தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்குதல் மூலம் ஏராளமானோர் பலன் அடைந்துள்ளனர்.மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.77 ஆயிரம் கோடி கடன்வழங்கப்பட்டுள்ளது. கல்வி கடனாகரூ.55ஆயிரம்கோடிஅளிக்கப்பட்டுள்ளது.நிலங்களைஅரசுகையகப்படுத்தும்போதுஅதற்கான நஷ்டஈடு தொகையை அதிகரித்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நிறைவேற்றி உள்ளோம். மகளிர் பாதுகாப்பு, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இவை எல்லாவற்றையும் விட இந்த நாட்டில் அரசு அறிவிக்கும் திட்டங்களின் நிலை குறித்து கடைக்கோடி குடிமகனும் அறிந்து கொள்ளும் தகவல் அறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றி புரட்சி செய்துள்ளோம்.இந்த சட்டத்தின் மூலம் அரசுக்கு கேள்வி எழுப்பும் குடிமகனுக்கு 20 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்ற உரிமையை பெற்றுக் கொடுத்துள்ளோம். இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுவரை இந்தியாவை ஆண்ட எந்த அரசும் செய்திடாத சாதனையை எங்கள் அரசு செய்து உள்ளது என்பதற்கு இவையே உதாரணமாகும்.
இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் சவால்விட்டு கேட்கிறேன். காங்கிரஸ் கட்சியைவிட இலங்கை தமிழர்களுக்கு எந்த கட்சி நன்மை செய்திருக்க முடியும்.அன்புத்தலைவர் ராஜீவ் காந்தி ரத்தம் சிந்தியதை யாரும் மறக்க முடியாது. இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு நன்மை தொடர்ந்து செய்யும் என்று உறுதி அளிக்கிறேன். இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு சாலைகள் போட்டுக் கொடுத்துள்ளது.ரெயில்வேதண்டவாளங்கள்அமைத்துகொடுத்துள்ளது.பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.மேலும் இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஏற்பட மத்திய அரசு முன்னெடுத்து செல்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் செய்த சாதனைகளை மறைத்துயாரும்தவறாக பிரசாரம் செய்ய வேண்டாம்.
குமரி மாவட்டத்தில் மீனவர்களுக்கு பிரச்சினைகள், துன்பங்கள், துயரங்கள் வந்தபோது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடர்ந்து பாதுகாப்பு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் தமிழக மீனவ பிரதிநிதிகளையும் இலங்கை அரசுடன் சந்தித்து பேச முயற்சி செய்த பெருமை மத்திய அரசே சாரும். இந்திய தேசம் மிகப்பெரிய சவாலை எதிர்நோக்கி இருக்கிறது. இந்த தேர்தல் மதவாதம், அரசியல் ஆதாயம், பண பலம் ஆகியவற்றுடன் இந்திய தத்துவத்திற்கு சவால் விடுக்கிற தேர்தலாக உள்ளது. பா.ஜனதா கட்சி தேசத்தை பிரித்து ஆள நினைக்கிறது. அவ்வாறு நினைத்தால் சமூக அமைதி என்னவாகும். நாட்டில் வளர்ச்சி, முன்னேற்றம் வருமா? பா.ஜனதா கட்சி இன்று ஒரு நபரிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது. அவர் இந்தியாவில் உள்ள எந்த பிரச்சினைக்கும் தீர்வுஇருப்பதாக சொல்கிறார். அவரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அந்த மனிதரின் கைகளில் இந்த தேசம் போய் விடக்கூடாது. நமது காங்கிரஸ் தலைவர்கள் தேச ஒற்றுமைக்காக பெரிய விலை கொடுத்துள்ளனர். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் இந்தியாவின் தத்துவத்தை காப்பாற்ற இன்னுயிரை நீத்தனர். எல்லா சமூகத்தினரும் வளர்ச்சி அடைய காங்கிரசை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு சோனியாகாந்தி பேசினார். சோனியாவின் பேச்சை பீட்டர் அல்போன்ஸ் மொழி பெயர்த்தார்.
சோனியா வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மைதானத்தில் மெட்டல் டிடெக்டர் கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தன.குமரி மாவட்ட இலங்கை அகதிகள் முகாம்களில் தங்கியிருந்தவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.சோனியாகாந்தி பிரசார கூட்டத்தில் நடிகர் கார்த்திக் கலந்து கொண்டு பேசினார்.மேலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வசந்தகுமார் (கன்னியாகுமரி), ராமசுப்பு (நெல்லை), கிருஷ்ணசாமி வாண்டையார் (தஞ்சை) ஆகியோரும் பங்கேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ஜான்ஜேக்கப், விஜயதரணி, முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன், ராகுல் நற்பணி மன்ற தலைவர் மாகின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்