முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெறுப்பை தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கை

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable


புது டெல்லி, ஏப் 17 - அரசியல் கட்சியினர் வெறுப்பை தூண்டும் வகையில் பேசினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மூத்த அரசியல் கட்சி தலைவர்களான பாஜகவின் அமீத்ஷா, சமாஜ்வாடி கட்சியின் ஆஸம்கான், காங்கிரசின் வேணி பிரசாத் வர்மா மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் விடுத்துள்ள உத்தரவில்,
மக்களிடம் வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவோர் மீது எவ்வித தலையீட்டுக்கும் இடமளிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி, சுதந்திரம் மற்றும் நேர்மையான தேர்தல் நடவடிக்கைகளுக்கு சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் குந்தகம் விளைவித்திருக்கிறது.
இத்தகைய விஷயத்தில் மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். நடத்தை விதிகளை பின்பற்றி அனைத்து பிரச்சாரங்களையும் பாகுபாடின்றி கண்காணிப்பது, வீடியோவில் பதிவு செய்வது ஆகியவற்றில் தேர்தல் அதிகாரிகள் தீவிரம் காட்ட வேண்டும்.
பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் உணர்ச்சிகளை தூண்டும் வகையில் பேசினால் அவர்கள் யாராக இருந்தாலும் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறை கண்காணிப்பாளரும் ஒரே நேரத்தில் பூர்வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை ஊடகங்கள் வழியாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். விதிமீறல்கள் குறித்து ஊடகங்கள் மூலம் தகவல் தெரிந்தாலும் அதற்குரிய மதிப்பளிக்கவேண்டும். பிரச்சார ஒருங்கிணைப்பாளரிடம் பிரச்சாரம் குறித்த முழுமையான பேச்சுக்களை 2 குறுந்தகடுகள் மூலம் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago