முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக நலத்திட்டங்களை கண்டு ஆச்சரியப்படும் குஜராத் மக்கள்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


 ஈரோடு, ஏப் 18 -  ஈரோட்டில் பேசிய மோடி,  தமிழகத்திற்கு குஜராத்தில் இருந்து வரும் 10 வயது, 12 வயது குழந்தைகள் இங்கு மின் விசிறி ஓடவில்லை என்றால் ஆச்சர்யமாக பார்ப்பார்கள் என்று மோடி கூறினார்.
இது குறித்து நடுநிலையாளர்கள் கூறும் போது,
அதே குஜராத்தில் இருந்து 10 வயது, 12 வயதுகுழந்தைகள் தமிழ் நாட்டில்  உள்ள பள்ளி குழந்தைகளை பார்த்தால், முதல்வர் ஜெயலலிதா வழங்கும் காலனி, மடிக்கணினி, புத்தகம், பஸ் பாஸ், வண்ண சீருடைகள் ஆகியவற்றை கண்டு மூக்கில் விரல் வைப்பார்கள் எனவும், இதேபோல்  குஜராத் பெண்கள் தமிழகம் வந்து பார்த்தால் விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை கண்டு வாயடைத்து போவார்கள் என்று தெரிவித்தனர்.
கூட்டணி கட்சியினர் ஆப்சென்ட்:
ஈரோட்டில் நேற்று ஏ.ஈ.டி பள்ளி மைதானத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நேற்று பிரச்சாரம்  செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி நேற்று காலை முதலே மோடியை காண பொதுமக்கள் பெருமளவில் வந்திருந்தனர். இதனால் தலைவர்கள் உற்சாகமடைந்திருந்தனர். மேலும்கூட்டத்தில் கூட்டணி கட்சியினரான தே.மு.தி.க, பா.ம.க ,கொ.ம.தே.க தொண்டர்களை காண முடியவில்லை
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்