முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும்: கோகுல இந்திரா

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப். 18 - மத்திய சென்னை அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து புதுப்பேட்டையில் தேர்தல் பொறுப்பாளர்கள் கோகுல இந்திரா, அமைச்சர் அப்துல் ரகீம், பாலகங்கா எம்.பி., மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பிரசாரம் செய்தனர். வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டார்கள். கவுன்சிலர்கள் க.மகிழன்பன், ம.முஹம்மது இம்தியாஸ், வட்ட செயலாளர்கள் பனித்துளி தயாளன், குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்று ஆதரவு திரட்டினர்.
பிரசாரத்தில் கோகுல இந்திரா பேசியதாவது:_
புரட்சித் தலைவி தமிழகம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களின் சமமான வளர்ச்சி இந்தியாவின் பொருளாதார கொள்கையையும், வெளியுறவு கொள்கையையும் நிதி கொள்கையையும் பொறுத்தே அமையும் என்று கூறியுள்ளார். எனவே தமிழகத்தின் உரிமைகளையும் பங்கையும் பெறவும் மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கவும் மத்தியில் புரட்சித் தலைவி பிரதமராக வரவேண்டும்.
மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய பங்கு வழங்காமல் துரோகம் செய்கிறது. தி.மு.க. மத்தியில் காங்கிரசை ஆதரித்தும் சென்னையில் எதிர்த்தும் இரட்டை வேடம் போடுகிறது. மகளிருக்கு சம உரிமை வழங்க ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார். புரட்சித் தலைவி மத்திய அரசின் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தால் மட்டுமே மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறும். தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே மக்களை சந்திக்கும் தயாநிதி மாறனை ஒதுக்க வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கழக மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமாரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு கோகுல இந்திரா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்