முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரியில் 34 மாதங்களில் எண்ணற்ற பணிகள்: முதல்வர்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப்.18 - கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வசதிகளை கடந்த 34 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம். கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை மருத்துவமனை 4 கோடியே 27 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலவில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க, பாலேகுளி ஏரியிலிருந்து 6 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய கால்வாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதே போன்று, போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள விருப்பம்பட்டி ஏரியிலிருந்து 1 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் ஒரு வழங்கு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. பர்கூரில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்தினை, அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் வகையில் போச்சம்பள்ளி_கொட மாண்டப் பட்டி சாலையினை 8 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போச்சம்பள்ளி_கொட மாண்டப்பட்டி சாலையிலிருந்து சிப்காட் தொழில் வளாகத்தை இணைக்கும் வகையில் புதிய சாலை 3 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
கிருழணகிரி மாவட்டத்தில் 8 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் கொய்மலர் நாற்றுகள் உற்பத்தி செய்திடும் சிறப்பு மையம் அமைத்திடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவீன வசதியுடன் கூடிய சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டு உள்ளது. ஒசரில் உள்ள பொறியியல் குழுமத்திற்கான பொது வசதி மையம் 6 கோடியே 90 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  
விலங்குகள் மக்கள் வாழ்விடங்களுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், கிருழணகிரி தொகுதிக்கு உட்பட்ட ஓசர் மற்றும் தருமபுரி பகுதிகளில் யானை தடுப்பு அகழிகள் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், தண்ணீர் வசதியை பெருக்குதல் உட்பட பல்வேறு பணிகள் 12 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.
கிருழணகிரி மாவட்டத்தில் நாட்டு கோழி வளர்ப்பினை ஊக்கப்படுத்த 94 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  ஒசர் நகராட்சியில் 13 கோடியே 39 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 608 புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
கிருழணகிரி மாவட்டத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 360 குடியிருப்புகளில் வசிக்கும் 15,000 மக்கள் பயனடையும் வகையில் 19 கிலோ மீட்டர் நீளமுள்ள குடிநீர் வழங்கும் அமைப்புகள் 64 லட்சம் பொய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்தில் உள்ள 360 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் ஒரு லட்சத்து 9 ஆயிரம் மக்கள் பயன் பெறும் வகையில், 19 கோடியே 38 லட்சம் ரூபாய் செலவில் தனி மின் விசை குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
உங்கள் ஆதரவோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியில் அமையப் பெறும் போது, இந்தத் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஜோலார்பேட்டை முதல் ஒசர் வரையிலான கிருழணகிரி வழியாக செல்லும் ரயில் பாதை அமைத்துக் கொடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருழணகிரி மக்களவைத் தொகுதியின் வளர்ச்சிக்காக, நலனுக்காக பல்வேறு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.தமிழகத்திலே மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்த அரசு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. கடந்த  34 மாத கால ஆட்சியில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் மீறி, திமுக_வின் சதித் திட்டங்களையும் மீறி, தமிழக மக்களுக்கு என்னென்ன நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை, தொலைநோக்குத் திட்டங்களை  என்னால் தர முடியுமோ, அவற்றையெல்லாம் தந்திருக்கிறேன்; அளித்துக் கொண்டும் வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்