முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரி - தருமபுரியில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப். 18 - வருகின்ற 24.4.2014 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து வான் வழியாகப் புறப்பட்டு பிரச்சாரப் பயணத்தின் முதல் இடமான கிருஷ்ணகிரி சென்றடைந்த போது, அங்கு கிருஷ்ணகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில் வரவேற்பும், திருக்கோயில்களின் சார்பில் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பொதுக்கூட்டம் நடைபெறும் இடமான `பூசாரிப்பட்டி கூட்டு ரோடு, வரட்டனம்பள்ளி மெயின் ரோடு, கிருஷ்ணகிரி ஒன்றியம்' என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரச்சாரப் பொதுக்கூட்ட மேடையைச் சென்றடைந்து, அங்கே லட்சக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையே, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் பல்வேறு அவலங்களையும்; திமுக மத்திய அரசில் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் நாட்டிற்கு செய்திட்ட பல்வேறு துரோகங்களையும்; ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக கழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், திமுக_வின் சுயநலவாத செயல்களையும் பட்டியலிட்டு; பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் நரேந்திரமோடி முதலமைச்சராக இருக்கும் குஜராத் மாநிலத்தையும், தமிழ் நாட்டையும் ஒப்பீடு செய்து, அனைத்து நிலைகளிலும் தமிழகம் முன்னணி வகிப்பதை நயம்பட வாக்காளப் பெருமக்களுக்கு எடுத்துக் கூறியதோடு; கழக அரசால் தமிழ் நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், கிருழணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு செய்துள்ள மக்கள் நலப் பணிகளையும் நேர்த்தியாக எடுத்துரைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து,
அ.தி.மு.க. வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்ய வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.    
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உரையைக் கேட்ட மக்கள், எங்கள் வாக்கு இரட்டை இலை சின்னத்திற்கே என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பின்னர், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கிருஷ்ணகிரியில் இருந்து வான் வழியாகப் புறப்பட்டு தருமபுரி சென்றடைந்த போது, அங்கு தருமபுரி, சேலம் புறநகர் ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில் வரவேற்பும், திருக்கோயில்களின் சார்பில் பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்