முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரியில் 34 மாதங்களில் நிறைவேற்றிய திட்டங்கள்: முதல்வர்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப். 18 - தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வசதிகளை கடந்த 34 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம்.  தருமபுரி தொகுதிக்குட்பட்ட மேட்டூர் நகராட்சியில் 73 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டு, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு உள்ளன. தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பால் பண்ணையில் உள்ள குளிர்விப்புத் திறன் வசதி, குளி%ட்டப்பட்ட பாலைச் சேமிக்கும் கொள் கலன் வசதி, பாலை திடப்படுத்தும் வசதி உட்பட பல்வேறு வசதிகள் 3 கோடியே 93 லட்சம் பொய் செலவில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.  
தருமபுரி மாவட்டம், ராமகொண்ட ஹள்ளி கிராமம் வழியாக செல்லும் மத்தனப் பள்ளம் ஆற்றின் குறுக்கே 14 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிய ஏரி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நவீன வசதியுடன் கூடிய சேமிப்பு கிடங்கு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், செட்டிக்கரையில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு தேவையான கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் 89 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன. விலங்குகள் மக்கள் வாழ்விடங்களுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், கிருழணகிரி தொகுதிக்கு உட்பட்ட ஓசர் மற்றும் தருமபுரி பகுதிகளில் யானை தடுப்பு அகழிகள் அமைத்தல், தடுப்பணைகள் கட்டுதல், தண்ணீர் வசதியை பெருக்குதல் உட்பட பல்வேறு பணிகள் 12 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன. தருமபுரி மாவட்டத்தில் நாட்டு கோழி வளர்ப்பினை ஊக்கப்படுத்த 94 லட்சத்து
20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் 8 கோடியே 67 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில்,
5 மேம்பாலங்கள் கட்டும் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒரு பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. மூன்று பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மீதமுள்ள ஒரு பால கட்டடப் பணி தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிவாடி_தருமபுரி ரயில் நிலையங்களுக்கு இடையில் ஒரு சாலை மேம்பாலம், வெண்ணம் பட்டியில் ஒரு சாலை மேம்பாலம், தருமபுரி_பாலக்கோடு ரயில் நிலையங்களுக்கு இடையில், ஒகேனக்கல்_பென்னாகரம்_தருமபுரி_திருப்பத்தூர் சாலையில் ஒரு மேம்பாலம், தருமபுரி_பாப்பாரப்பட்டி சாலையில் ஒரு சாலை மேம்பாலம் என 4 சாலை மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.  
மேட்டூர் நகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் 74,000 மக்கள் பயன்பெறும் வகையில் 12 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை அடுத்த மாதம் நிறைவு பெறும்.   இந்த மாவட்டத்தில் உள்ள 324 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பயன் பெறும் வகையில்,
17 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் தனி மின்விசைத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தருமபுரி மக்களவைத் தொகுதியின் வளர்ச்சிக்காக, நலனுக்காக பல்வேறு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்