முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடி: முதல்வர்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.18 - கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூசாரிப்பட்டி கூட்டு ரோடு, வரட்டனம்பள்ளி மெயின் ரோடு, கிருஷ்ணகிரி ஒன்றியம்' என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது,
சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதலமைச்சருமான நரேந்திர மோடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தி.மு.க_வுடன் இணைத்து, இவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்கவும் இல்லை, அக்கறை செலுத்தவும் இல்லை   என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவிலேயே சதா சர்வகாலமும் மக்களைப் பற்றியே நினைக்கிற ஒரே மக்கள் இயக்கம் அதிமுகதான். அதனால் தான், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறோம். ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 25,000 ரூபாய் நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். பட்டம் மற்றும் பட்டயம் படித்தப் பெண்களாக இருந்தால், அவர்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்குவதுடன் 50,000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை கட்டணமில்லா கல்வி வழங்கப்படுகிறது. இது தவிர, விலை ஏதுமின்றி பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், உபகரணப் பெட்டிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினி மற்றும் ஊக்கத் தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டைதாரர்களுக்கு மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி ஆகியவை விலை ஏதுமின்றி வழங்கப்படுகின்றன. வெண்மைப் புரட்சியை உருவாக்கும் வகையில் விலையில்லா கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத் தொகை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. சரிய மின் சக்தியுடன் கூடிய    பசுமை வீடுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்று உழவர் பாதுகாப்புத் திட்டம், விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என எண்ணற்ற திட்டங்கள் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகராட்சிகளில் ஏழை, எளிய மக்கள் பசியாற மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கப்படும் "அம்மா உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. காய்கறிகள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் துவக்கப்பட்டு உள்ளன. வெளிச் சந்தையில் கிலோ அரிசி 20 பொய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். இவை எல்லாம் ஏழை மக்களை மனதில் வைத்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் இல்லாமல் வேறு என்ன? மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு விளங்குகிறது.
ஓர் அரசு மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசா என்பதை கணிக்க உதவுவது பல்வேறு மனித வளக் குறியீடுகள். இதன் அடிப்படையில் குஜராத்தை விட தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது.
மொத்த மக்கள் தொகையில் 16.6 விழுக்காடு மக்கள் குஜராத்திலே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 11.3 விழுக்காடு மக்கள் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். குழந்தை இறப்பு விகிதத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆனால், குஜராத் மாநிலம் 11_ஆவது இடத்தில் இருக்கிறது. இன்னும் சற்று விளக்கமாக  சொல்ல வேண்டுமென்றால், தமிழ் நாட்டில் உயிருடன் பிறக்கும்
1,000 குழந்தைகளில் 21 குழந்தைகள் மட்டுமே ஒரு வயது அடைவதற்குள் இறக்கின்றன. ஆனால், குஜராத்தில் 1,000 குழந்தைகளுக்கு 38 குழந்தைகள் இறக்கின்றன. தமிழ்நாட்டில் தாய் இறப்பு விகிதம் 90 என்ற அளவில் இருக்கிறது. ஆனால், குஜராத்தில் 122 என்ற அளவில் இருக்கிறது. தமிழ்நாட்டின் உற்பத்தித் துறையில் <டுபட்டிருக்கும் தொழிலாளர்களில் 14.3 விழுக்காடு தொழிலாளர்கள் பட்டதாரிகள்.  
ஆனால், குஜராத்தில் 10 விழுக்காடு தொழிலாளர்களே பட்டதாரிகளாக உள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அதிக மக்கள் பயன்பெறும் ஒரே மாநிலம் தமிழ்நாடு.  
ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறான நிலைமை குஜராத்தில் நிலவுகிறது. மாநிலத்தின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. குஜராத் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.  
அந்நிய முதலீட்டை ஈர்ப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 2012_2013 ஆம் ஆண்டில் மட்டும் 15,252 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெறப்பட்டு இருக்கிறது. அதே காலகட்டத்தில் குஜராத்தில் 2,676 கோடி ரூபாய் மட்டுமே அந்நிய முதலீடாக பெறப்பட்டு இருக்கிறது.  வாக்காளப் பெருமக்களே! சிந்தித்துப் பாருங்கள். 15,252 கோடி பொய் எங்கே? வெறும் 2,676 கோடி ரூபாய் எங்கே? மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது, ஆனால் குஜராத் 11_ஆவது இடத்தில் இருக்கிறது.  
தமிழ் நாட்டில் உள்ள மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 36,996. ஆனால், குஜராத்தில் வெறும் 22,220 தொழிற்சாலைகள் தான் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 90 ஆயிரம். ஆனால், குஜராத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 50 ஆயிரம் தான்.  
2011_ஆம் ஆண்டு முதல் 2013 வரை தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 732.  
ஆனால், குஜராத்தில் ஒரு லட்சத்து   20 ஆயிரத்து 16 தொழில்கள் தான் துவங்கப்பட்டன.
உணவு தானிய உற்பத்தியில் 2011_2012 ஆம் ஆண்டு 101.51 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயர் அளவை எட்டி தமிழகம் சாதனை படைத்துள்ளது. இதற்கான மத்திய அரசின் விருதும் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளது. ஆனால், குஜராத் மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி வெறும் 88.74 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவில் தான் உள்ளது.
2013_2014 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் உணவு தானிய உற்பத்தி 103 லட்சம் மெட்ரிக் டன் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது போன்று பல துறைகளில் குஜராத்தை விட தமிழ் நாடு தான் முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.  
வாக்காளப் பெருமக்களே! இப்போது நான் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் இந்தியாவிலேயே பலருக்கு வியப்பை அளிப்பவையாக இருக்கும். பலருக்கு இன்று தான் கண்களை திறந்து விட்டதைப் போல தோன்றும். இது தான் உண்மை நிலை. இதுவரை எல்லாவற்றிலுமே இந்தியாவிலேயே குஜராத் தான் முதன்மையான மாநிலம் என்ற ஒரு மாய தோற்றம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.  
ஆனால், அது உண்மை அல்ல. உண்மை நிலை என்னவென்றால் குஜராத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது. ஆனால், தமிழ் நாடு எனது தலைமையில் வெற்றுப் பேச்சிலும் விளம்பர வெளிச்சத்திலும் கவனம் செலுத்தாமல், மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது. சதா சர்வ காலமும் மக்கள் நலன் பற்றியே சிந்தித்து கர்ம சிரத்தையுடன் கடமை ஆற்றியதால் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ் நாட்டில் இத்தனை சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago