முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகனேக்கல் குடிநீர் பிரச்சனையில் ஸ்டாலின் பொய் பிரச்சாரம்

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப்.18 - ஒகனேக்கல் கூட்டு குடிநீர் பிரச்சினையில் மு.க. ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார் என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டி உள்ளார்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் பிரச்சனை குடிநீர்ப் பிரச்சனை. இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை கடந்த ஆண்டு நான் துவக்கி வைத்தேன்.  பொய்ப் பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ள தி.மு.க_வினர், ஒகனேக்கல்  கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தீட்டியதே தி.மு.க. என்பது போலவும், எனது தலை++யிலான அரசு இந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது என்றும், இதுவரை எந்தப் பகுதிக்கும் தண்ணீர் செல்லவில்லை என்றும், பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  ஸ்டாலினும் இந்தத் திட்டம் குறித்து இந்தப் பகுதியில் பொய்ப் பிரச்சாரம் செய்துள்ளார்.  ஒரு திட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பு அதனை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.  
1965ம் ஆண்டு முதன் முதலில் இந்தத் திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது, 1986ம் ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுபின்னர் 1994ம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்த போது, சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தேன். ஆனால், அப்போது மத்திய அரசு இதற்கு அனுமதி பெற்றுத் தருவதில் தாமதம் செய்ததால், நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது.
1996_ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  
1998_ல் மத்திய நீர்வளத் துறை அமைச்சக செயலாளர் முன்பு நடைபெற்றக் கூட்டத்தில், கர்நாடக அரசால் ஒகேனக்கல் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் நான் முதலமைச்சரான போது 2003_ல் இந்தத் திட்டத்தை 1,005 கோடி ரூபாய் மதிப்பில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு வங்கியின் நிதி உதவியுடன் நிறைவேற்றுவதற்கான கருத்துருவை மத்திய அரசுக்கு நான் அனுப்பினேன்.  
இதன் அடிப்படையில் நிதி உதவி பெறப்பட்டு, 26.2.2008 அன்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனை எதிர்த்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஒகேனக்கல்லில் போராட்டம் நடத்தினார். இதனை எதிர்த்து அப்போது முதலமைச்சராக இருந்த  கருணாநிதி குரல் கொடுக்கவில்லை. ஒகேனக்கல்லில் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 27.3.2008 அன்று ஒகேனக்கல்லில் எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் பிரம்மாண்டமான அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  
கர்நாடகாவிலே  கருணாநிதி குடும்பத்தினர் வியாபாரம் செய்கின்றனர். தொலைக்காட்சி சேனல்களை வைத்து இருக்கின்றனர். கர்நாடகாவிற்கு எதிராக கருத்து தெரிவித்தால், குடும்ப வியாபாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறுத்தி வைக்கப்படும் என்று கூறினார் கருணாநிதி.  2011ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. ஆட்சியை விட்டுச் செல்லும் போது,
50 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், வெறும் 18 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டு இருந்தன. மீதம் இருந்த பணிகள் எனது ஆட்சிக் காலத்தில் இரண்டே ஆண்டுகளில் முடிக்கப்பட்டு, இதனை நான் துவக்கி வைத்தேன். ஆனால், ஸ்டாலினோ 2012_ஆம் ஆண்டிற்குள்ளேயே இந்தத் திட்டம் முடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக, இங்கே உங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது.  காவேரி நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் காங்கிரஸ், தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வரும் மக்களவை தேர்தலில் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்