முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐரோப்பிய ஹாக்கி தொடர்: இந்தியா தோல்வி

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      விளையாட்டு
Image Unavailable


புது டெல்லி, ஏப்.18 - நெதர்லாந்தின் நார்டென் நகரில்  நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது.
உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் வரும் மே 31 முதல் ஜூன் 15 வரை நடைபெறவுள்ளது. அதற்கு ஆயத்தமாகும் வகையில் இந்திய அணி, நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐரோப்பிய அணிகளுடன் விளையாடி வருகிறது.
தொடரின் முதல் ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தைச் சேர்ந்த லெய்டன் ஹாக்கி கிளப்பை தோற்கடித்த இந்தியா, 2-வது ஆட்டத்தில் 3-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தின் தேசிய கிளப்புடன் டிரா செய்தது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் பெல்ஜியத்தை எதிர்கொண்டது இந்தியா.
ஆரம்பத்தில் இந்தியா சிறப்பாக ஆடியபோதும் ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி பெல்ஜியத்தின் டாம் பூன் கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது பெல்ஜியம்.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் பெல்ஜியத்துக்கு கோல் வாய்ப்புகள் கிடைத்தாலும் அதை கோலாக்க முடியாத வகையில் இந்தியா அசத்தலாக ஆடியது. அதேநேரத்தில் கோலடிக்க தொடர்ந்து போராடிய இந்திய அணிக்கு 58-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. துணை கேப்டன் ரூபிந்தர் பால் சிங், பெனால்டி கார்னர் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி கோலடித்து ஸ்கோரை சமன் செய்தார்.
ஆனாலும் இந்த சமநிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த நிமிடமே டாம் பூன் கோலடிக்க, அதுவே வெற்றிக் கோலானது. இந்தியா இன்று நடைபெறும் 4-வது ஆட்டத்தில் நெதர்லாந்தைச் சந்திக்கிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்