முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

19 வாக்குச் சாவடிகளில் நூற்றுக்கும் குறைவான வாக்காளர்கள்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஏப்.19 - தமிழகத்தில் 19 வாக்குச்சாவடிகளில் நூற்றுக்கும் குறைவான வாக்காளர்களே உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். பியுஇஎஸ், நடுப்பட்டி (58 வாக்காளர்கள், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி), சிஐடி நகர் 4-வது பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி அண்ணா மேல்நிலைப் பள்ளி (79 வாக்காளர்கள், தி.நகர்), அரசு மறுவாழ்வுமையம், புதிய மல்லவாடி (92 வாக்காளர்கள், கீழ்பெண்ணாத்தூர்), அரசு மறுவாழ்வுமையம், எடைக்கல் (91 வாக்காளர்கள், உளுந்தூர்பேட்டை), அரசு மறுவாழ்வுமையம், தேவியாகுறிச்சி (99 வாக்காளர்கள், கெங்கவல்லி) அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, அய்யன்பேட்டை (95 வாக்காளர்கள், உத்திரமேரூர்). 

மாநகராட்சி தொடக்கப் பள்ளி சேலம், திருவிக சாலை (72வாக்காளர்கள், சேலம் வடக்கு), பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப் பள்ளி, பெண்தட்டி (76 வாக்காளர்கள், உதகை), அரசு மேல்நிலைப்பள்ளி, மஞ்சூர் (20 வாக்காளர்கள், உதகை) மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள தும்மக்குண்டு பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப் பள்ளி (31 வாக்காளர்கள்) மற்றும் வெள்ளிமலை துரைசாமி மரகதம் தொடக்கப்பள்ளியில் உள்ள 2 வாக்குச்சாவடிகள் (தலா 99 வாக்காளர்கள்). 

திருவில்லிபுத்தூர் தொகுதியில் செண்பகத் தோப்பில் உள்ள பழங்குடி தங்கும்விடுதிப்பள்ளி (53 வாக்காளர்கள்) மற்றும் ஊரான்பட்டி நடுநிலைப் பள்ளி (51 வாக்காளர்கள்) ஆகிய வாக்குச்சாவடிகளில் நூற்றுக்கும் குறைவான வாக்காளர்களே உள்ளனர். 

விவேகானந்தா பள்ளி, பட்டினம்காத்தான் (திருவாடானை தொகுதி), பிபிடிசி தொடக்கப் பள்ளி, குதிரைவெட்டி (அம்பாச முத்திரம்) ஆகிய இரு வாக்குச்சாவடிகளில் தலா 99 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்திலேயே மிகக்குறைவாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மனாபபுரம் தொகுதியில் கோதையார் மேல்தாங்கலில் உள்ள மனமகிழ் மன்றத்தில் 18 வாக்காளர்களே உள்ளனர். இவ்வாறு பிரவீண்குமார் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்