முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திமுகவில் தனிநபர் ஆதிக்கம்தான்: செஞ்சி ராமச்சந்திரன்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      அரசியல்
Image Unavailable

 

செஞ்சி, ஏப் 19 - செஞ்சியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த செஞ்சி ராமச்சந்திரன் கூறியதாவது,  திமுக தலைவர் கருணாநிதியின் நடவடிக்கையில் மாற்றம் இருக்கும் என நம்பி அவரது அழைப்பை ஏற்று திமுகவில் இணைந்தேன். நாடாளுமன்ற தேர்தலில் கடலூர், ஆரணி தொகுதியை சுயநல கும்பலால் திமுகவிற்கு இல்லாமல் போய் விட்டது. திமுகவில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை. 

இலங்கையில் போரை நிறுத்த கோரி அனைத்து அரசியல் கட்சி அமைப்புகளும் குரல் கொடுத்த நிலையில் இந்திய நாடாளுமன்ற தேர்தலும் நடந்தது. போரை தடுத்து நிறுத்த கருணாநிதி உறுதியான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இலங்கை தமிழர்களை காப்பாற்ற தவறியவர் கருணாநிதி. அவரின் போக்கு பெரிதும் வேதனைப்படுத்தியது. அடுத்து நடந்த 2011 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சி மலர்ந்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரும் விடுதலை என அறிவித்தார்.  அவரது தைரியம் எந்தவொரு முதலமைச்சருக்கும் வராது. இந்த செயலே என்னை அதிமுகவில் இணைய காரணமானது. 

மாநில சுயாட்சி என்ற பெயரில் தன் குடும்பம், சொத்து, வழக்குகளை சமாளிக்கவுமே  மத்தியில் நல்ல பதவிகளை பெற்று கருணாநிதி அனுபவித்து வந்தார். பணபலம், ஜனநாயக விரோத நடவடிக்கை, தனிநபர் ஆதிக்கம்தான் திமுகவில் உள்ளது. 

அதிமுக, மதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எல்லாமே திராவிட கட்சிகள்தான். ஆனால் இதில் திராவிட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது அதிமுக மட்டும்தான். திராவிடத்தின் அடிப்படை லட்சியம் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதுதான். இவ்வாறு செஞ்சி ராமச்சந்திரன் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்