முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வளர்ச்சி ஒத்துழைப்பு மாநாடு: இந்தியா - சீனா புறக்கணிப்பு

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஏப்.19 - மெக்ஸிகோவில் நடைபெற்ற சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு மாநாட்டை இந்தியாவும், சீனாவும் புறக்கணித்தன.

சர்வதேச வளர்ச்சி ஒத்துழைப்பு மாநாடு முதல் முறையாக மெக்ஸிகோ தலைநகர் மெக்ஸிகோ சிடியில் நடைபெற்றது. 2 நாள்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் , அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள்  உள்பட சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர். ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் இந்தியாவும், சீனாவும் புறக்கணித்து விட்டன. இது குறித்து செய்தியாளர்களிடம் ஐ.நா. அதிகாரிகள் கூறியதாவது: மாநாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்ட வளர்ந்து வரும் நாடுகள் தொடர்பான சில அம்சங்கள் மீது இந்தியாவும், சீனாவும் கவலைக் கொண்டிருந்தன.

குறிப்பாக தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு என்ற கோட்பாட்டின் நோக்கங்கள் மீது 2 நாடுகளும் அதிருப்தியில் இருந்தன. இதேபோல் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு கோட்பாட்டின் மூதுள்ள அதிருப்தி காரணமாக 133 வளர்ந்து வரும் நாடுகள் கொண்ட அமைப்பில் சக்திவாய்ந்த தனிக்கு முவாக செல்படும் ஜி-77 நாடுகளும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

இவ்வாறு மாநாட்டில் அனைத்து நாடுகளும் கலந்து கொள்ளாத நிலையில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவது இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பிடிக்கவில்லை. இதனால் மெக்ஸிகோ மாநாட்டில் இந்தியாவும், சீனாவும் கலந்து கொள்ளவில்லை, என்று தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்