முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணம் பற்றி பேசிய வேட்பாளரை திட்டித் தீர்த்த ராம்தேவ்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

ஆல்வார், ஏப்.19 - ராஜஸ்தான் மாநில்த்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பணம் குறித்து பேசிய பா.ஜ. வேட்பாளரை யோகா குரு ராம் தேவ் அடக்கினார். மைக் ஆனில் இருந்து தெரியாமல் இருவரும் பேசிக்கொண்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மக்களவை தொகுதியில் பா.ஜ. சார்பில் மகந்த் சந்த்நாத் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் பன்வார் ஜிதேந்திர சிங் போட்டியிடுகிறார். ஆல்வாரில் மகந்த் சந்த்நாத்தை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் யோகா குரு ராம் தேவ் கலந்து கொண்டார். அப்போது, ராம்தேவிடம் தேர்தல் நிதி திரட்டுவது கடினமாக உள்ளது. மேலும், பணத்தை கொண்டு வரவும் முடியவில்லை" என்று மேடையில் மெல்லிய குரலில் கூறினார். 

உஷாரான ராம் தேவ், " முட்டாள்தனமாக பேசாதே, மேடையில் பணத்தை பற்றி பேசாதே. நமக்கு முன் மைக்ரோ போன் பொருத்தப்பட்டுள்ளது" என்று கோபமாக கூறினார். ஆனால், இருவரும் பேசிய போது மைக் ஆனில் இருந்ததால் தெளிவாக வெளியில் கேட்டது. இந்த காட்சியும் பேச்சும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ராம்தேவ் - பா.ஜ. வேட்பாளர் மகந்த் சந்த் நாத்தின் பேச்சு குறித்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் காங்கிரசார் புகார் அளித்துள்ளனர். 

"தற்போது தான் அவர்களின் உண்மையான நிறம் வெளிப்பட்டுள்ளது" என்று காங்கிரஸ் வேட்பாளர் பன்வார் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். ஆனால், தாங்கள் அப்படி எதுவும் பேசவில்லை. 

வேறு விஷயம் பேசி கொண்டிருந்தோம் என்று ராம்தேவும் மகந்தும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago