முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு எதிராக உமாபாரதி பேசிய சிடிக்கள் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.19 - நரேந்திர மோடி மீது சரமாரியாக குற்றம் சாட்டி 3 ஆண்டுகளுக்கு முன்பு உமா பாரதி பேசிய சிடிக்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்தில் உமாபாரதி புகார் தெரிவித்துள்ளார். 

பா.ஜ.மூத்த தலைவர் உமாபாரதி, கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பா.ஜ.வில் இல்லாத போது, நரேந்திர மோடிக்கு எதிராக சரமாரியாக குற்றம் சாட்டி கூட்டங்களில் பேசினார். குஜராத்தை போல இந்துக்கள் அச்சத்துடன் வாழ்கின்ற மாநிலத்தை எங்கும் பார்க்க முடியாது. மோடி அவதார புருஷர் இல்லை. அவர் ஒரு அழிவு சக்தி என்று பேசியுள்ளார். அதன்பின், இப்போது பா.ஜ.வில் மீண்டும் சேர்க்கப்பட்டார். உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி தொகுதியில் பா.ஜ. சார்பில் உமா பாரதி போட்டியிடுகிறார். 

இந்நிலையில், 3 ஆண்டுக்கு முன்பு பேசிய சிடிக்களை காங்கிரஸ் இப்போது வெளியிட்டுள்ளதற்கு உமா பாரதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உமா பாரதி கூறுகையில், நரேந்திர மோடியை சர்வாதிகாரி போல சித்தரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் சிடியை வெளியிட்டுள்ளது. மோடி பற்றி கருத்தில் அமெரிக்கா கூட தனது நிலையை மாற்றி கொண்டுள்ளது. காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளேன் என்றார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில், வேறு யாரோ ஒருவர் கூறியதல்ல, பா.ஜ,வின் மூத்த தலைவர்களே மோடியை பற்றி எவ்வகையான கருத்து வைத்துள்ளனர் என்பதையே உமா பாரதியின் பேச்சு சுட்டுக் காட்டுகிறது என்றார். 

தற்போது இந்த  சிடி இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்