முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றாலை மின் உற்பத்தி: 1000 மெகாவாட்டாக அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப் 19 - காற்றாலை மின் உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் தவிர்த்து அனைத்து அனல் மின் நிலையங்களிலும் முழுமையான மின் உற்பத்தி இருந்ததாலும், நீர் மின் உற்பத்தி சிறப்பாக இருந்ததாலும் மின் பற்றாக்குறை குறைந்து விட்டதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

மொத்த மின் உற்பத்தி 12,140 மெகாவாட்டாகவும், மின்தேவை 12,330 மெகாவாட்டாகவும் இருந்தது. நேற்று முன்தினம் நீர் மின் நிலையங்கள் மூலம் 939 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மின் உற்பத்தி மாலை நேரத்தில் நன்றாக இருந்தது. கடந்த சில நாட்களாக 500 மெகாவாட் அளவுக்கு இருந்த மின் உற்பத்தி கடந்த புதனன்று 1,049 மெகாவாட்டாக உயர்ந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்