முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகனுக்கு ரூ. 343 கோடி சொத்து: வேட்பு மனுவில் தகவல்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஏப் 19 - ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி புலிவெந்துலா சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. 

ஜெகன்மோகன் ரெட்டி அந்த மனுவில், தன் மீது சிபிஐ 10 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து இருப்பதாகவும், அநத் 10 வழக்கு விசாரணைகளை தான் எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர அமலாக்க பிரிவினரும் தன் மீது தனியாக ஒரு வழக்கு தொடுத்து இருப்பதாக கூறியுள்ளார். 

ஜெகன்மோகன் ரெட்டி தனக்கு மொத்தம் ரூ. 343 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார். எந்தெந்த நகரங்களில் எவ்வளவு அசையா சொத்துக்கள் உள்ளது என்றும் பட்டியலிட்டுள்ளார். அவரது சொத்துக்களில் பெரும்பாலானவை தொழில் நிறுவனங்களின் பங்கு முதலீடாக இருக்கிறது. 

கடப்பா மாவட்டத்திலும் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திலும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் தனக்கு சொந்தமாக இருக்கும் விபரத்தையும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்ற வேட்பாளர்கள் தங்கள் சொத்து மதிப்பை முன்பை விட அதிகரித்து காட்டியுள்ள நிலையில் ஜெகன்மோகன் தன் சொத்து மதிப்பு குறைந்துள்ளதாக கூறியுள்ளார். 

ஜெகன்மோகன் ரெட்டி தன் மனைவி பெயரில் உள்ள சொத்துக்கள் பற்றியும் தன் வேட்பு மனுவில் தகவல்கள் தெரிவித்துள்ளார். அவருக்கு ரூ. 72 கோடி சொத்துக்கள் உள்ளது. மேலும் அவரிடம் தங்க, வைர நகைகள் மட்டும் ரூ. 6 கோடி அளவுக்கு உள்ளது. ஆனால் அவருக்கு சொந்தமாக கார் ஒன்று கூட இல்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்