முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈஸ்டர் பண்டிகை தலைவர்கள் வாழ்த்து

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். 20 - ஈஸ்டர் பண்டிகையை யொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி:

இயேசு பெருமான், கொடியோர் இழைத்த துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று மீண்டெழுந்தார் எனக் கூறி, அந்நாளை கிறிஸ்தவ சமுதாய உடன்பிறப்புகள், ''<ஈ ஸ்டர்'' எனும் இன்பத் திருநாளாகக் கொண்டாடி மகிழ்வர். இந்த ஆண்டின் <ஸ்டர் திருநாளை இன்று (ஞாயிறு) அன்று கொண்டாடி மகிழ்ந்திடும் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

இந்நன்னாளில் கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது <ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்:

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்'' என்று கூறி அடித்தள மக்களின் வாழ்வு உயர்வுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த அருளாளர் இயேசு பெருமான்.

அவர் ரத்தம் சிந்தி மரணத்தை தழுவினாலும் முன்றாம் நாளில் மீண்டும் உயிர்த்தெழுந்தார். அவர் உயிரித்தெழுந்த நாள் <ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவ பெருமக்களால் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்படுகிறது.

இந்நன்னாளில் நாட்டின் மத, இன, மொழி, வேறுபாடுகள் மறந்து பகைவர்களுக்கும் அருளும் பண்பு மனிதர்களிடையே மிளிர்ந்து அனைவரும் அமைதி, சமாதானப்படுத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ இயேசு கிறிஸ்தவின் போதனைகளை நெஞ்சில் ஏற்போம்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:

பகைவர்களுக்கும் அருள் செய்வதும், பாமரர்களுக்கும் அன்பு காட்டி உதவி செய்வதும் அவர் அளித்த போதனைகளில் சிறந்த ஒன்று மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஏசுபிரான்.மதவெறியை மாய்த்து, மனிதநேயம் தழைக்க <ஈஸ்டர் திருநாள் ஒரு இன்பத் திருநாளாக மலரட்டும். 

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

உலகை இரட்சிக்க வந்தவரான இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் திருநாளான ஈ<ஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிலுவையில் மரித்து, பின்னர் இன்று உயிர்த்தெழுந்த இயேசு உங்கள் கவலைகளையெல்லாம் மாற்றி முழுமையான மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரப்புவாராக என வாழ்த்துகிறேன்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:

சிலுவையிலே ஆவியை நீத்த இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததையே, இன்று உலகம் கொண்டாடுகிறது. கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈ<ஸ்டர் வழங்குகிறது.

<ழத்தமிழரின் துன்பத்தைப் போக்க இந்த <ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் 

ஆர்.சரத்குமார் . எம ..எல்.ஏ :

அன்பின் வழியது உயிர்நிலை என்று தனது போதனைகளின் மூலம் ; அன்பையும், அருளையும் அள்ளி வழங்கிட, அவதரித்த இயேசு பிரான் மரித்து உயிர்த்தெழுந்த திருநாளாம் <ஈஸ்டா ; திருநாளை உலகெங்கும் உள்ள கிறிஸ்துவ சகோதர சகோதரிகள் மகிழ்வோடு கொண்டாடுகின்றனர். 

மக்களிடையே நிலவும் பேதங்கள் மறைந்திட அன்பு வழி ஒன்றுதான் உன்னதமான வழி என்று நமக்கு போதித்தவர் இயேசு பிரான். அத்தகைய போதனைகளை பின்பற்றி மனிதகுலம் வாழ்வாங்கு வாழ்ந்தால்தான் ; நமது வாழ்க்கைக்கு அர்த்தமுள்ளதாக 

இந்த இனிய <ஈஸ்டர் திருநாளில் அன்பு மலர்ந்து, சகோதரத்துவம் செழித்து உலகெங்கும் சமத்துவமும், சமாதானமும், சந்தோ'ஷமும் நிலவிட வேண்டும் என்கின்ற எனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு எனது அன்பான நல்வாழ்;த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆர்.சரத்குமார் . எம ..எல்.ஏ. கூறியுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்