முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வில் கலைஞர் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப். 20 - தற்போது தி.மு.க.வில் கலைஞர் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை இதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.தி.மு.க.விலே என்ன நடக்கிறது என்பதற்கு நான் ஏன் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட பலர் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே சாட்சி என்று

லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்திர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று  நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:_

அன்புக்குரிய நண்பர் ஆற்க்காடு வீராசாமி மூலம் தி.மு.க. தலைவர் கலைஞர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27_ந் தேதி இலட்சிய தி.மு.க.விற்கு, தி.மு.க. கூட்டணியில் சீட்டு தருவதாக சொல்லி அழைத்திருந்தார்.

தே.மு.தி.க.வும், காங்கிரசும் இனி தங்களுடன் கூட்டணி சேராது என்று முடிவானதால் தி.மு.க தலைமை வேறுவழியின்றி ஆற்காட்டார் மூலம் எனக்கு அழைப்பு விடுத்தது. 

என் முன்னாள் தலைவர், குரு, என்ற முறையில் அவரை சந்திக்க சென்றேன். நான் சென்றிருக்க கூடாது. சிலர் பார்வையில் அது குற்றம் ஆனால் நான் சென்றதற்கு காரணம் ஒரு குரு மீதுள்ள மரியாதை நிமித்தம். சூழ்நிலை கைதியாகத்தான் தி.மு.க தலைவரை சந்தித்தேன்.

 ஆனால், தி.மு.க தலைவர் கருணாநிதி ராஜதந்திரமாக எதுக்கு தனியாக கட்சி நடத்தி சிரமப்பட வேண்டும். பேசாமல் தி.மு.க.வில் இணைந்துவிடு என்றார்.  ஆனாலும், கூட  இலட்சிய தி.மு.க.வை கலைத்து விட்டு தி.மு.க.விலே இணைய சொன்ன போது, கடந்த காலத்தில் தாயக மறுமலர்ச்சி கழகத்தை இணைத்து விட்டு ஏற்பட்ட கசந்த அனுபவத்தின் காரணமாக அதற்கு மறுத்து விட்டேன்.எனக்கு அப்போதுதான் அவரது எண்ணம் புரிந்தது. ஏற்கனவே இப்படிதான் திரும்பி வந்த என்னை தாயக மறுமலர்ச்சி கழகத்தை கலைக்க சொல்லி தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டார். கட்சியில் பெரிய பொறுப்பு தருவதாக கூறி கழற்றி விட்டார். அதனால், இந்த முறை நான் ராஜதந்திரமாக கட்சியை கலைக்க மறுப்பு தெரிவித்து கூட்டணி மட்டும் வைத்துக் கொள்வோம். எங்களுக்கு 3 தொகுதிகளை மட்டும் தருமாறு கேட்டேன். அதற்கு யோசிப்பதாக கூறி அனுப்பி வைத்துவிட்டார்.கருணாநிதியுடனான சந்திப்பு பின்னணியை அப்போதே நான் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துவிட்டேன். கருணாநிதியும் என்னை தி.மு.க.வில் இணைப்பது குறித்து அறிக்கை வெளியிட்டார். அதில், ராஜேந்தரை சேர்ப்பது குறித்து நான் முடிவு எடுத்து விட்டேன். ஆனால், கட்சியின் முடிவு பற்றி இன்னும் தெரியவில்லை என்ற தொனியில் அறிக்கை இருந்தது. இதில் இருந்து என்ன தெரிகிறது கருணாநிதியால் முடிவு எடுக்க முடியவில்லை. தி.மு.க.வில் உட்கட்சி பிரச்னை அதிகம் உள்ளது. கருணாநிதியே முடிவு எடுத்துவிட்டபிறகு நான் தி.மு.க.வில் சேர்வதை தடுத்த சக்தி எது?

கலைஞர் அவர்களே தி.மு.க.வின் பிரசார பகுதியை பலப்படுத்துவதற்காக தம்பி டி.ராஜேந்தரை அழைத்தேன் தி.மு.க.விலே இணைக்க அழைப்பு கொடுத்தேன் என்று அவர் கைப்பட அறிக்கை கொடுத்தார்.நான் திமுகவில் இணையவில்லை. இணைந்த மாதிரி இருக்கும். ஆனால் இணையவில்லை. கருணாநிதி அணைத்த மாதிரி இருக்கும்.. ஆனால் அணைக்கவில்லை. நான் திமுகவில் சும்மா கை கட்டி நிற்க விரும்பவில்லை. அப்படி இருப்பதற்கு நான் ஏன் அங்கு போக வேண்டும். அங்கு ஏகப்பட்ட உட்கட்சி குழப்பம் இருக்கிறது. நான் லட்சிய திமுகவை ஒருபோதும் கலைத்துவிடவில்லை. 

 

தி.மு.க.விற்கு பல இக்கட்டான சூழ்நிலை வந்தபோதெல்லாம் நான் கலைஞர் பக்கத்தில் இருந்து இருக்கின்றேன். இது கடந்த கால வரலாறு. இப்போதும் இந்த தேர்தல் களத்திலும் நான் கூட்டணியிலாவது இருக்க வேண்டும் என்று கலைஞர் நினைத்தார். ஆனால் தற்போது தி.மு.க.வில் கலைஞர் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. இதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது.

தி.மு.க.விலே என்ன நடக்கிறது என்பதற்கு நான் ஏன் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்ட பலர் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே சாட்சி! என்னை கலைஞர் தி.மு.க.வில் சேர்க்க நினைத்தார். ஆனாலும் நான் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராக சேரவில்லை.

அதற்குள்ளே அவர்கள் கட்சிக்குள்ளே உள்கட்சி குழப்பம், இதிலே போய் களமிறங்கி நான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் கலைஞர் தான் என்று, என்னை இடவிடுவார்கள் முழக்கம்? இதற்குள்ளே அத்தனையும் அடக்கம்! இதன் மூலம் என்னை செய்து விட்டதாக சிலர் நினைக்கலாம் முடக்கம், ஆனால் என்னை பொறுத் தவரை இது ஒரு தொடக்கம்.

திரைப்படத்திற்கு கூட இரண்டு பாகம் உண்டு. என்னை பொறுத்தவரையில் முடிந்திருப்பது முதல் பாகம் இனிமேல் தான் இருக்கிறது இரண்டாம் பாகம்.

இந்த தேர்தல் காலம் ஒரு இடைவேளை எதிர்காலத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் தனித்து நிற்கின்ற அளவிற்கு இலட்சிய தி.மு.க.வை வளர்ப்பதே என் முதல் வேலை

தி.மு.க.விலே களமிறங்கி கலைஞர் அவர்களும் அவரது மகன் தளபதி அவர்களும் செய்கிறார்கள் பிரசாரம் அவர்களிடத்தில் இருக்கிறது தெம்பு... அவர்கள் விடுகிறார்கள் அம்பு... பரவாயில்லை என்னிடத்திலும் இருக்கிறது. தெம்பு என்னிடத்திலும் இருக்கிறது அம்பு என்று நான் செய்யவில்லை வம்பு.

என்னதான் ஆட்டக்காரனாக இருந்தாலும் காலம் கைகொடுத்தால் தான் யாருமே களம் இறங்க முடியும். நான் தற்போது இந்த தேர்தலில் களம் இறங்காமல் இருந்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் எந்த நிலையிலும் தரம் இறங்கி போகமாட்டேன் இது நிச்சியம். அது தான் என் இலட்சியம்.அச்சிறுப்பாக்கம், காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் என்னுடைய சேவை தேவை என்று ஜெயலலிதா வெளிப்படையாக அழைத்ததால் பிரசாரத்திற்கு சென்றேன். இரு தொகுதியிலும் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு நான்தான் காரணம் என்று மார்தட்டிக் கொள்ளவில்லை. நானும் ஒரு காரணம் என்றுதான் கூறுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago